தமிழகத்தில் 70 தியேட்டர்களில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு- சினிமா தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

யுஎப்ஓ மூவீஸ் என்ற நிறுவனம் சதர்ன் டிஜிடல் ஸ்க்ரீன்ஸ் இந்தியா மூலம் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஓளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 70 திரையரங்குகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதில் சென்னை ஐநாக்ஸ், பைலட், பேபி ஆல்பர்ட், மதுரையில் மாணிக்க விநாயகர், திருச்சியில் மாரிஸ் காம்ப்ளக்ஸ், கோவை கங்கா உள்ளிட்ட திரையரங்குகள் முக்கியமானவை. சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை மட்டும் சென்னை திரையரங்குகளில் பார்க்க முடியாது.
மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை இந்தப் போட்டிகளை ஒளிபரப்புகிறது சதர்ன் டிஜிட்டல் ஸ்கிரீன்ஸ் இந்தியா.
இந்த நிலையில், திடீரென இந்த ஏற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில்.
கிரிக்கெட் மாட்ச் பார்க்க ஸ்டேடியத்துக்கு போகட்டும். தியேட்டரில் என்ன வேலை... ஒரு திரைப்படத்தை வெளியிடவே போதுமான திரையரங்குகள் இல்லாத நிலையில், கிரிக்கெட் மாட்ச்சை காட்ட தியேட்டர்கள் ஒதுக்குவதை கடுமையாக எதிர்க்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் புதிய முடிவை தயாரிப்பாளர் கவுன்சில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications