Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 2 இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை உள்ளது..இயான் பிஷப்!

டெல்லி : இந்தியாவின் தேசிய அளவிலான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மவி மற்றும் கம்லேஷ் நகர்கோட்டி நம்பிக்கை அளிப்பதாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் பௌலர் இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேற்கிந்திய தீவுகள் அணி நாளை மறுதினம் முதல் 3 சர்வதேச டி20 தொடர், 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையில் வென்றதால் மட்டுமே இந்தியாவுடன் மோதவுள்ள தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் என்று கூற முடியாது என்றும் இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.

 நாளை மறுதினம் துவக்கம்

நாளை மறுதினம் துவக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, சர்வதேச டி20 தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதவுள்ளது. முதல் டி20 போட்டி நாளை மறுதினம் ஐதராபாத்தில் துவங்க உள்ளது.

 தொடர் குறித்து இயான் பிஷப் கருத்து

தொடர் குறித்து இயான் பிஷப் கருத்து

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள இந்த சுற்றுப்பயணம் குறித்து அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா உலக கிரிக்கெட்டில் மிகவும் வலிமையாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாய்ப்பு

டி20 உலக கோப்பையில் பெற்ற வெற்றியை கொண்டு இந்தியாவிற்கு எதிரான எதிர்வரும் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறும் என்று கூறிவிட முடியாது என்று அதன் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் தெரிவித்துள்ளார்.

 வெற்றி பெறாவிட்டால் ஆச்சரியம் இல்லை

வெற்றி பெறாவிட்டால் ஆச்சரியம் இல்லை

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் வலிமையான இந்திய அணியுடன் மோதி அவர்கள் தோல்வியுற்றாலும் ஆச்சர்யம் அடைய வேண்டியதில்லை என்றும் இயான் கூறியுள்ளார்.

 2020 உலக கோப்பைக்கு உதவும்

2020 உலக கோப்பைக்கு உதவும்

வலிமையான இந்திய அணியுடன் மோதி தோற்றாலும் அதை அனுபவமாக கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள இயான், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு அதை பாடமாக கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இந்தியாவின் இளம் வீரர்கள்

இந்தியாவின் இளம் வீரர்கள்

இந்தியாவில் தேசிய அளவில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மவி மற்றும் கம்லேஷ் நகர்கோட்டி இருவரும் நம்பிக்கை அளிக்கும் வேகப்பந்து விச்சாளர்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 4, 2019, 21:05 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+