
ரூ.1 கோடி சம்பளம்
இந்த நால்வரும், 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்க முடியாமல் பெவிலியனில் உட்கார்ந்திருந்தாலும், இந்த சம்பளம் ஒரு வருடத்திற்கு வந்து சேரும். மேலும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு, ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பளம். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படும்.

போனஸ்கள்
இதுபோக டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி. தரவரிசையில முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் அணியை வீழ்த்தினால் கூடுதலாக 50 சதவீத சம்பளம் போனஸாக கிடைக்கும். டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் 100 சதவீதம் கூடுதலாக கிடைக்கும்.

சதத்துக்கு பரிசு
ஒருநாள் போட்டியில் உலகக்கோப்பையை வென்றால் 300 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். அத்துடன் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ரூபாய் ஐந்து லட்சமும், இரட்டை சதம் அடித்தால் ரூ.7 லட்சமும் போனசாக கிடைக்கும்.

பவுலர்களுக்கு ஊக்கம்
பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ரூபாய் ஐந்து லட்சமும், டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தினால் ரூ.7 லட்சமும் போனசாக கிடைக்கும்.

ரெய்னா பி பிரிவில்
‘பி' பிரிவில் ரெய்னா, அம்பதி ராயுடு, ரோகித் சர்மா, முரளி விஜய், தவான், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புஜாரா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, டெஸ்ட் போட்டியில் விளையாட மூன்று லட்சமும், ஒருநாள் போட்டியில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கிடைக்கும்.

ஜடேஜா சி பிரிவில்
'சி' பிரிவில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், அரவிந்த், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, விருதிமான் சாஹா, மோகித் ஷர்மா, வருண் ஆரோன், கரன் ஷர்மா, கே.எல்.ராகுல், தவல் குல்கர்ணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு, ஒருநாள் போட்டிக்கு ஒரு லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications











