சச்சின் கூட கோலியை ஒப்பிடாதீர்கள்.. கம்பீர் சொன்ன காரணம்.. பொறாமை பேச்சா? உண்மையா?
மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தனது 45 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சச்சினுக்கும் அவருக்கும் வெறும் 4 சதம் தான் இடைவெளியில் இருக்கிறது.
மேலும் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 45 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள கம்பீர் இலங்கை இன்றைய ஆட்டத்தில் மோசமாக பந்து வீசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சினுடன் விராட் கோலியை ஓப்பிட்டு பேச கூடாது என்றும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,

ஏமாற்றத்தை அளிக்கிறது
இலங்கை பந்துவீச்சு மிகவும் சாதாரணமாக இருந்தது. இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்கள்.குறிப்பாக விராட் கோலி ,ரோகித் சர்மா ஆகியோர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த இலங்கை அணி எந்த முயற்சியும் செய்யவில்லை. இது எனக்கு நிச்சயம் ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் இலங்கை வீரர்கள் பந்து வீசவே இல்லை. நிச்சயம் எனக்கு இது ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஒப்பிட முடியாது
விராட் கோலி இன்று 45 வது சதத்தை விளாசி இருக்கிறார் ஆனால் சச்சின் உடன் விராட் கோலி அடிக்கும் சதங்களை ஒப்பிட முடியாது. ஏனென்றால் இரண்டுமே வெவ்வேறு காலம் சச்சின் விளையாடும் போது 30 மீட்டர் உள் வட்டத்தில் ஐந்து வீரர்கள் இருக்க மாட்டார்கள் இதனால் இருவரையும் ஒப்பிடக்கூடாது என்று கம்பீர் கூறியுள்ளார் .கம்பீரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கம்பீர் பேச்சு சரியா?
கம்பீர் பொறாமையுடன் பேசி வருவதாகவும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். எனினும் கம்பீர் சொன்னதில் தவறு ஏதுமில்லைம் ஏனென்றால் ஒரு காலத்தில் பவர் பிளே முடிந்ததிலிருந்து கடைசி 50-வது ஒரு வரை பவுண்டரி லைனில் ஐந்து பில்டர்கள் இருப்பார்கள். இதனால் உங்களால் ரன் எடுப்பது மிகவும் கடினம். ஆனால் இப்போது பவுண்டரி லைனில் வெறும் 4 வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் நடுவரிசையில் களமிறங்கும் வீரர்கள் அதிரடியாக ரன் குவிக்கிறார்கள்.

காரணம் என்ன?
ஒரு காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் தாண்டினாலே பெரிதாக பார்க்கப்படும். ஆனால் இப்போது 300 ரன்கள் அடித்தாலும் எதிரணி அதனை சுலபமாக எட்டி விடும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த காலத்தில் அனைத்து அணிகளின் பந்துவீச்சும் டாப் கிளாஸ் ஆக இருக்கும். அவ்வளவு ஏன் இலங்கை அணியில் கூட முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், சமீன்தா வாஸ், குலசேகர போன்ற டாப் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது இலங்கை அணியின் பந்துவீச்சை பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் புரியும்.
இதனால் இரண்டு காலத்தையும் ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும் கருத்தை தான் கம்பீர் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications