கம்பீருக்கு இனிமே தான் பிரச்சனையே.. உச்சகட்ட கடுப்பில் ரோஹித்.. உள்ளடி வேலைகளை வெளியே சொல்ல வாய்ப்பு
மும்பை: ரோஹித் சர்மா இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக அவர் பொதுவெளியில் பனிப்போரை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணிக்குள் கௌதம் கம்பீரின் தன்னிச்சையான முடிவுகளால் மோசமான சூழ்நிலை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சில இளம் வீரர்களைத் தவிர மற்ற எந்த வீரருக்கும் அணியில் தங்களது இடம் உறுதியா, இல்லையா என்ற அச்சம் நிலவுகிறது.

2025 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை சிட்னி டெஸ்டிலிருந்து கம்பீர் நீக்கினார். இதைப் பார்த்த விராட் கோலி, தனது இடத்திற்கும் இதே போன்ற நிலை ஏற்படும் என்று சிந்தித்தே அவர்களாக நீக்கும் முன் தாமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக தற்போது கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் கம்பீருக்கு அணியில் முழு சுதந்திரம் கொடுத்தவர் ரோஹித் சர்மா தான். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்ற பிறகு கம்பீர் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவில் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்க முயன்றது, சிட்னி டெஸ்டில் ரோஹித்தை நீக்கியது மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு ரோஹித்தின் ஒருநாள் கேப்டன் பதவியைப் பறித்தது என எல்லாவற்றையும் கம்பீரே முன்னின்று செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது ஒருநாள் அணியிலும் தனது இடம் பறிபோகும் சூழலில், ரோஹித் சர்மாவிற்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லைஎன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மக்கள் தொடர்பு குழுவினர் (PR Agency) மூலம் கம்பீரின் உள்ளடி வேலைகளைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த வாய்ப்பு உள்ளது.
முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித்தின் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா பறித்த போது, பாண்டியா 3 ஆண்டுகள் சந்தித்த நெருக்கடிகளை நாம் பார்த்தோம். அதேபோன்ற நிலை கம்பீருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரோஹித்தின் கௌரவம் சார்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதால், இந்திய கிரிக்கெட்டில் இது சலசலப்பை ஏற்படுத்தக் கூடும்.


Click it and Unblock the Notifications

