Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-க்கு உள்ள பெரும் சிக்கல்.. இங்கிலாந்து அணி அதிகாரி சொன்ன தகவல்.. முக்கிய அணிகளுக்கு பின்னடைவு

இங்கிலாந்து: ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பே இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஆஷ்லே கில்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் கால இடைவெளிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கட்டாயம்

கட்டாயம்

ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்காவிட்டால் ரூ.2500 கோடி வரை பிசிசிஐ-க்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. எனவே இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்க பிசிசிஐ கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது. ஆனால் இங்கிலாந்து வாரியம் அதனை ஏற்கவில்லை.

செப்-ல் ஐபிஎல்

செப்-ல் ஐபிஎல்

இதனிடையே ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. இந்திய வீரர்கள் இதனை முடித்துவிட்டு அமீரகம் சென்று அங்கு ஐபிஎல்-ல் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திட்டங்கள் உள்ளது

திட்டங்கள் உள்ளது

இந்நிலையில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஆஸ்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செப் - அக் இடைவெளியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் தான். ஆனால் ஓய்வு அளிப்பது அவர்கள் வேறு தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் டி20 உலகக்கோப்பைகாக முழு திட்டங்கள் போட்டுள்ளோம்.

 திட்டவட்ட முடிவு

திட்டவட்ட முடிவு

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்டம்பரில் முடிந்த கையுடன் இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து தொடர்கள் உள்ளது. செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன் பின்னர் பாகிஸ்தான் தொடர் என டி20 உலகக்கோப்பை தொடர் வரை முழு திட்ட அட்டவணைகள் போடப்பட்டுள்ளன எனவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனக்கூறியுள்ளார். ஐபிஎல்-ல் இங்கிலாந்து நாட்டின் சிறந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் இல்லாதது தற்போது அணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, May 28, 2021, 19:57 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+