Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் ரசிகருக்கு நோஸ் கட்.. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை செம பதிலடி.. டிவிட்டரில் சுவாரஸ்யம்

மும்பை : டி20 உலககோப்பையில் இந்தியாவின் வெற்றி குறித்து பாராட்டி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போட்ட டிவிட் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டி20 உலககோப்பையில் இந்திய அணி , நேற்று வெற்றி பெற்ற நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் வெற்றியை, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கடைசி 3 ஓவரை மட்டும் மீண்டும் கண்டு களித்து என்னுடைய தீபாவளியை கொண்டாடினேன். இந்தியாவின் சிறந்த ஆட்டம் இது என்று பாராட்டியுள்ளார்.

பாக். ரசிகர் கிண்டல்

பாக். ரசிகர் கிண்டல்

சுந்தர் பிச்சையின் இந்த டிவிட்டை பார்த்து கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் ஒருவர் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித், ராகுல் ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்ததை கிண்டல் செய்யும் விதமாக இந்தியாவின் முதல் 3 ஓவர்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

பதிலடி தந்த சுந்தர் பிச்சை

பதிலடி தந்த சுந்தர் பிச்சை

இதற்கு பதிலடி தந்துள்ள சுந்தர் பிச்சை, இந்தியாவின் முதல் 3 ஓவர்களை பார்த்தேன். ஆர்ஸ்திப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசினர் என்று பாராட்டியுள்ளார். இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததை கிண்டல் செய்த பாகிஸ்தான் ரசிகருக்கு, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் டக் அவுட் ஆனதையும், ரிஸ்வான் 4 ரன்களில் ஆட்டமிழந்ததையும் மறைமுகமாக கூறி, சுந்தர் பிச்சை தக்க பதிலடி தந்துள்ளார்.

பாக். ரசிகர்கள் புகார்

பாக். ரசிகர்கள் புகார்

சுந்தர் பிச்சையின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் , நடுவர்கள் தவறான முடிவை அறிவித்தால் தான் இந்தியா வென்றதாக குற்றச்சாட்டி டிரெண்ட் செய்து வருகின்றனர். எனினும் விதிப்படியே நடுவர்கள் செயல்பட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, October 24, 2022, 17:57 [IST]
Other articles published on Oct 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+