மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூர்யகுமார் யாதவ் அதிரடியான சதம் காரணமாக 218 ரன்கள் குவித்தது. இருப்பினும் குஜராத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

சூர்யகுமார் யாதவின் ஆட்டம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. களம் விட்டு சூர்யகுமார் யாதவ் திரும்பிய போது, குஜராத் அணியின் அனைத்து வீரர்களும் பாராட்டு தெரிவித்தனர். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மாஸ் என்றால், எதிர்முனையில் ரஷித் கான் செய்த கெத்தான சம்பவத்தை ரசிகர்கள் மறந்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவின் அபாரமான ஆட்டத்தால் குஜராத் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இன்னும் சொல்லப் போனால் குஜராத் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல் அல்ஜாரி ஜோசப் 52 ரன்களை விட்டுக் கொடுத்தார். குஜராத் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் எகனாமி ரேட்டும் 9 க்கும் அதிகமாக உள்ளது.
ஆனால் ரஷித் கான் மட்டும் 4 ஓவர்கள் வீசி வெறும் 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் என்னதான் சூர்யகுமார் யாதவ் ஏலியன் லெவல் இன்னிங்ஸ் ஆடினாலும், வான்கடே மைதானத்திலேயே ரஷித் கான் தனது வித்தையை காட்டியுள்ளார். இதனை கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் 12 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பையும் கைப்பற்றியுள்ளார். வான்கடே போன்ற மைதானங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருக்கும் சூழலில், சூர்யகுமார் யாதவ் சதம் விளாசிய அதே இன்னிங்ஸில் ரஷித் கான் வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ரியல் மாஸ் சம்பவம்.