Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குஜராத் அபார வெற்றி..லக்னோவின் தோல்வியால் சிஎஸ்கே அடித்த பம்பர் பரிசு..பிரகாசமாகும் பிளேஆப் வாய்ப்பு

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் 51வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும் லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற குர்னல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணி பந்துவீசுவதாக கூறினார்.

இதனையடுத்து, பேட்டிங் செய்த குஜராத் அணி வீரர்கள், லக்னோ பந்தை சிதறடித்தனர். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 4 ஓவர் முடிவில் எல்லாம் குஜராத் அணி 50 ரன்களை எடுத்தது. இதில் 20 பந்தில் சாஹா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் 29 பந்துகளை எதிர்கொண்டு சுப்மன் கில் அரைசதம் கடந்தார்.

Gujarat titans demolished Lucknow by 56 runs and advantage for csk

தொடர்ந்து அதிரடி காட்டிய சாஹா 43 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஒரு வழியாக ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 142 ரன்களை குவித்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 25 ரன்களும், டேவிட் மில்லர் 12 பந்துக்கு 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஒரு முனையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார்.

இதில் 7 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும் இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 227 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது தடுமாறியது. இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மெயர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதனால் பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி லக்னோ அணி 72 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக மெயர்ஸ் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கானின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 11 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 4 ரன்களும், பூரான் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Gujarat titans demolished Lucknow by 56 runs and advantage for csk

இதன் மூலம் லக்னோ அணி சரிவை நோக்கி சென்றது. தனி ஆளாக போராடிய குயின்டன் டி காக் 41 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆயுஷ் பதோனி 21 ரன்கள் சேர்க்க, லக்னோ அணி 171 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளை பெற்றது.

இதன் மூலம் லக்னோ அணிக்கு கிடைக்க வேண்டிய 2 புள்ளிகள் வராமல் போனது. தற்போது லக்னோ அணி அதிகபட்சமாக இனி 17 புள்ளிகளை தான் பெற முடியும். ஆனால் சிஎஸ்கே அணியால் 19 புள்ளிகள் வரை பெற முடியும். இதன் காரணமாக சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Story first published: Sunday, May 7, 2023, 19:50 [IST]
Other articles published on May 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+