மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் ஆணி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இருப்பினும் முதல் இரு இடங்களில் நிறைவு செய்ய குஜராத் அணிக்கு மேலும் சில வெற்றிகள் தேவையாக உள்ளது.
அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றால் மும்பை அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகும். ஒரே அணியில் ஆடிய வீரர்கள், வெவ்வேறு அணிக்காக இப்போது மோதிக் கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதுவரை மும்பை அணி சேஸிங்கில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளதால், முதலில் பேட்டிங் செய்வது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த போது சொதப்பியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை அணி விவரம்: இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன், விஷ்ணு வினோத், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா
குஜராத் அணி விவரம்: சாஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, அபினவ் மனோகர், மோகித் சர்மா, ரஷித் கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப்,ம் நூர் அஹ்மத்