இதுக்காகத்தான் சிஎஸ்கேவை விட்டு போனேன்.. இப்போ போய் இப்படி சொல்லுறாரே.. புயலை கிளப்பும் மூத்த வீரர்
சென்னை: கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடாதது ஏன் என்று ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
2020 ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு கெட்ட கனவாக அமைந்து இருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெற முடியாமல் சிஎஸ்கே அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதனால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பல முக்கியமான மாற்றங்களை செய்ய சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

சென்னை
இந்த நிலையில் கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடாதது ஏன் என்று ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார். கடந்த வருடம் அமீரகத்தில் ஐபிஎல் நடந்த ஹர்பஜன் சிங் திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலிங்கில் திணறியது.

நீக்கம்
குடும்ப காரணங்களை குறிப்பிட்டு ஹர்பஜன் வெளியேறினார். இந்த நிலையில் இந்த வருடம் ஹர்பஜனை சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்தது. ஹர்பஜன் எப்படியும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆட மாட்டார் என்று நினைத்துக் கொண்டு சிஎஸ்கே அணி அவரை ரிலீஸ் செய்தது.

ரிலீஸ் செய்தது
ஆனால் தற்போது ஹர்பஜன் ஐபிஎல் போட்டிகளில் ஆட தன்னை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து ஆட விருப்பம் என்று கூறியுள்ளார். இவருக்கான அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எப்படி
இந்த நிலையில் இது தொடர்பாக ஹர்பஜன் பேட்டி அளித்துள்ளார். அதில், ஐபிஎல் தொடரில் இந்த வருடம் ஆட நான் முனைப்பாக இருக்கிறேன் . இதற்காக நான் கடினமான உழைத்து வருகிறேன். கடந்த வருடம் கூட இதற்காக நான் பயிற்சி மேற்கொண்டேன்.

கொரோனா
ஆனால் கொரோனா காரணமாக ஆட முடியவில்லை. அப்போது நான் என் குடும்பத்தோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியவில்லை. அப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை.

முடிவு
எனக்கு வயதானாலும் இன்னும் நான் சிறப்பாக ஆட முடியும். இன்னும் என்னால் சிறப்பாக விக்கெட் எடுக்க முடிடியும். நான் பிட்டாக இருக்கிறேன். இந்த வருடம் ஐபிஎல்லில் கண்டிப்பாக கலக்குவேன் என்று எதிர்பார்க்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி சொல்கிறார்
சிஎஸ்கே அணி இதனால் அவசரப்பட்டு இவரை ரிலீஸ் செய்துவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. இவர் முன்பே ஐபிஎல் 2021ல் ஆடுவேன் என்று தெரிவித்து இருந்தால் சிஎஸ்கே இவரை தக்க வைத்து இருக்கும். இப்போது நல்ல ஸ்பின் பவுலர் இல்லாமல் சிஎஸ்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications