Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் நம்பர் 1 வீரர் கிடையாதாம்.. வன்மத்தை கக்கிய ஹர்பஜன் சிங்.. டாப் 5 வீரர்கள் லிஸ்டை பாருங்க

மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தறபோதைய நிலையில் டாப் 5 வீரர்கள் யார் என்று ஹர்பஜன் சிங் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், இந்திய அணியின் ஜாம்பவான்கள் விராட் கோலி, அஸ்வின், ரோகித் சர்மாவின் பெயரை அவர் சேர்க்கவில்லை.

ஹர்பஜன் சிங் பட்டியலில் முதலில் இருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் தான். லயான் தற்போது வரை 497 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், காயம் ஏற்பட்டதால், ஆஷஸ் தொடரிலிருந்து விலகி உள்ளார். ஹர்பஜன் பட்டியலில் 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இடம் பிடித்துள்ளார்.

Harbhajan singh removes Ashwin and kohli from top 5 test players list

ஸ்மித் தொடர்ந்து சதங்களாக அடித்து வரும் நிலையில், அவரை ஹர்பஜன் சிங் கவுரவித்துள்ளார். இந்த பட்டியலில் 3வது இடத்தை இந்திய வீரர் ரிஷப் பண்ட் பிடித்தி இருக்கிறார். டெஸ்ட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு என கலக்கி வருவதால், அவருக்கு ஹர்பஜன் இந்த இடத்தை கொடுத்துள்ளார்.இதே போன்று இங்கிலாந்த அணி கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்து இருக்கிறார். அதிரடி பேட்டிங், சிறந்த பந்துவீச்சு என கலக்கும் ஸ்டோக்ஸ், தனி ஆளாக போட்டியின் முடிவை மாற்றக் கூடியவர்.

இந்த பட்டியலில் ஹர்பஜன் சிங் அஸ்வினை சேர்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதல் நிலை வீரரான அஸ்வினை, ஹர்பஜன் சேர்க்காமல் விட்டுள்ளார். ஹர்பஜன் சிங் சாதனையை அஸ்வின் பலவற்றை முறியடித்து விட்டதால் , இப்படி அவருடைய பெயரை விட்டுவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, July 4, 2023, 18:58 [IST]
Other articles published on Jul 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+