மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இன்று ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளுக்கு எதிர்கொண்டு 103 ரன்கள் விளாசியது பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது. குஜராத் பெரும் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ வேண்டிய நிலையில் கடைசி கட்டத்தில் ரசீத் கான் 10 சிக்ஸர்களை விளாசி 32 பந்துகளில் 79 ரகளை விளாசினார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார். இந்த தோல்வியால் அணியில் பெருசாக எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஒட்டு மொத்தமாக நாங்கள் பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்றிலும் சொதபினோம்.
குறிப்பாக பந்துவீச்சாளர்கள் நாங்கள் போட்ட திட்டத்தை களத்தில் செயல்படுத்த முடியவில்லை. மும்பை வீரர்களை கட்டுப்படுத்த எங்களிடையே தெளிவான பிளானும் இல்லை. அதைப் போன்று இந்த மைதானத்தில் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவதெல்லாம் மிகவும் கடினம். பில்டர்களை நிறுத்த தான் என்னால் முடியும்.எப்படி பந்து வீச வேண்டும் என்று என்னால் சொல்லிக் கொடுக்க முடியாது.
நாங்கள் பந்துவீச்சில் கூடுதலாக 25 ரன்களை மும்பை அணிக்கு கொடுத்து விட்டோம். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்கலாம்.ஆனால் இது மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டியது ரஷித்தான் சிறப்பாக விளையாடி எங்கள் அணியின் நேட் ரன் ரெட்டை காப்பாற்றி விட்டார். சூரியகுமார் யாதவ் பற்றி அனைவரும் போதுமென்ற அளவுக்கு பேசி விட்டார்கள்.
ஏனென்றால் அவர் உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர். அவருக்கு பில்டிங்கை நிறுத்துவது என்பது முடியாத காரியம். உங்களுடைய திட்டத்தில் நீங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்று இன்று அவர் காண்பித்து விட்டார். என்னுடைய பந்துவீச்சாளர்களை தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாக்கினார் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.