For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிறம் மாறும் பச்சோந்தியா ஹர்திக் பாண்டியா.. கேப்டன் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, தமது சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்வார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குஜராத் அணியில் கேப்டன் பதவி கிடைக்கிறது என மும்பை அணியில் இருந்து விலகிச் சென்ற ஹர்திக் பாண்டியா, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தால் தான் கேப்டனாக தான் வருவேன் என்று அடம் பிடித்து ரோகித் இடத்தை காலி செய்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

Hardik pandya obsession with captaincy - How he convinced Chetan sharma to become t20 captain

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இப்படி நடந்து கொள்வது முதல் முறை அல்ல. யாரிடத்தில் அதிகாரம் இருக்கிறதோ அவர்களிடம் சென்று ஒட்டிக் கொள்வது தான் ஹர்திக் பாண்டியாவின் பணியாகவே இருந்திருக்கிறது. தோனி கேப்டனாக இருந்தவரை அவருடைய செல்லப் பிள்ளையாகவே ஹர்திக் பாண்டியா இருந்தார். அதன் பிறகு விராட் கோலி கேப்டனாக மாறியபோது விராட் கோலியுடன் நல்ல நட்பில் இருந்தார்.

ரோகித் சர்மா கேப்டனாக இருந்த போது ரோகித் சர்மாவுடன் நட்பில் இருந்து கொண்டே அவருக்கு பின்னால் ஒரு குழியை பறித்தார். அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவரான சேத்தன் சர்மாவிடம் சென்று டி20 இந்தியா அணியின் கேப்டனாக தம்மை நியமிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

இதனை சேட்டன் சர்மாவே தன்னுடைய ஸ்டிரிங் ஆபரேஷன் வீடியோவில் கூறி இருக்கிறார். அதில் ஹர்திக் பாண்டியா தமது வீட்டு சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டு செல்வார் என்று கூறியிருந்தார். இதில் இருந்தே ஹர்திக் பாண்டியா தமக்கு கேப்டன் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்வார் என்பதை காட்டுகிறது.

இதேபோன்று மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை சாதாரண வீரராக தான் அழைத்து இருக்கிறது. ஆனால் கேப்டன் பதவி கொடுத்தால் தான் வருவேன் என்று அங்கேயும் பேரம் பேசி இருக்கிறார். தற்போது 30 வயதாகி இருக்கும் ஹர்திக் பாண்டியா இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார்.

இதில் ஐபிஎல் தொடரில் மும்பை போன்ற பலமான அணியை பயன்படுத்திக் கொண்டு கோப்பையை ஹர்திக் வென்று விட்டு இந்திய டி20 அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட பாண்டியா காய் நகர்த்துவார். இனி கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என ஓய்வு பெற்று விட்டால், அவர் அரசியலுக்கும் சென்று விடுவார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, March 19, 2024, 18:25 [IST]
Other articles published on Mar 19, 2024
English summary
Hardik pandya obsession with captaincy - How he convinced Chetan sharma to become t20 captain நிறம் மாறும் பச்சோந்தியா ஹர்திக் பாண்டியா.. கேப்டன் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+