இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா ஹர்திக் பாண்டியா? காயத்திலிருந்து திரும்பி வந்து முதல் போட்டி
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த உலகக்கோப்பை தொடரில் போது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் இதுவரை பங்கேற்கவில்லை. இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என ஹர்திக் பாண்டியா முடிவெடுத்து இருப்பதால் ரஞ்சி போட்டிக்கும் அவர் திரும்பவில்லை.
இதனை அடுத்து குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவிய ஹர்திக் பாண்டியா அங்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் சிறந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் உடற்பயிற்சி செய்வதுபோல் போட்டோ போட்டு கொண்டு ஹர்திக் பாண்டியா சீன் போட்டார். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த தொடருக்கு தயாராகும் விதமாக மும்பையில் நடைபெறும் டி.ஒய். பாட்டில் டி20 தொடரில் விளையாடினார்.
இதில் மும்பை ரிலையன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார். குட்டி மும்பை இந்தியன்ஸ் அணியாகவே ஹர்திக் தலைமை தங்கிய ரிலையன்ஸ் அணி இருந்தது. இதில் திலக் வர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மதுவால் போன்ற வீரர்கள் களமிறங்கினர். பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பவுலிங்கில் ஹர்திக் பாண்டியாவால் ஆகா! ஓஹோ என்று செயல்படவில்லை என்றாலும் கொஞ்சம் சுமாராக தான் பந்து வீசினார். எனினும் பாரத் பெட்ரோலியம் அணியின் தொடக்க வீரர்கள் கவனக்குறைவால் தங்களுடைய விக்கெட்டை ஹர்திக் பந்து வீச்சில் இழந்தனர்.
ராகுல் திருப்பாதி டக் அவுட்டாக மற்றொரு வீரர் ஏக்னாத் 9 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா விடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழ்ந்தார். இதன் மூலம் மூன்று ஓவர்களை வீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெட்ரோலியம் அணி 18.3 ஓவரில் 126 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதை அடுத்து ரிலையன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி நர்மன் மற்றும் நேஹல் வதேரா அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள். சேர்த்தனர்.
32 பந்துகளை எதிர் கொண்ட நெஹல் வதேரா அரை சதம் கடந்தார். 87 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த ரிலையன்ஸ் அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர் ஒன்பதாவது விக்கெட்டுக்கு தான் களத்திற்கு வந்தார்.எனினும் அவர் பேட்டிங் பெரிய அளவில் ஏதும் சாதிக்கவில்லை. மொத்தமாகவே மூன்று ரன்கள் தான் அடித்தார். எனினும் எதிர்முனையில் இருந்த பியூஸ் சாவ்லா ரிலையன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications