பேஸ்பால் சவாலை வென்ற ஹர்திக் பாண்டியா.. மிஸ்டர் பீஸ்ட் வீடியோவில் பணம் வென்று நன்கொடை தந்தார்
பெங்களூரு: பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் நடத்திய பேஸ்பால் சவால் வீடியோவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 95 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் தயாரித்த இந்த சவால் வீடியோவில், லெப்ரான் ஜேம்ஸ், எர்லிங் ஹாலாண்ட், சீமோன் பைல்ஸ், கேட்லின் கிளார்க் மற்றும் அலிசா லியூ உள்ளிட்ட பல சர்வதேச விளையாட்டு பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்திய யூடியூபர் கேரிமினாட்டியும் பாண்டியா இடம்பெற்ற பகுதியில் கலந்துகொண்டார்.இந்த வீடியோவில் இடம்பெற்ற பேஸ்பால் ஹோம்-ரன் சவாலில் பாண்டியா வெற்றி பெற்றார். இதற்கு முன்பு தான் பேஸ்பால் விளையாடியதே இல்லை என்று பாண்டியா குறிப்பிட்டிருந்தாலும், இந்த சவாலில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றித் தொகையைக் கைப்பற்றினார்.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பேஸ்பால் போட்டி ஒன்றில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை பறக்கவிட்டார். அப்போது பேஸ்பால் விளையாட்டு கிரிக்கெட்டுக்கு ஈடு ஆனது அல்ல என்று இந்திய ரசிகர்கள் பதிவிட, ஒட்டுமொத்த பேஸ்பால் ரசிகர்களும் கிரிக்கெட்டை குறை கூறி, பேஸ்பால் விளையாட்டு தான் கடினம் என்று குறிப்பிட்டனர். இந்த சூழலில் தான் இந்த பேஸ்பால் சவால் நடந்தது. இதில், ஹர்திக் வெற்றி பெற்றார்.
தான் வென்ற 1,00,000 டாலர் பரிசுத் தொகையைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க ஹர்திக் பாண்டியா முடிவு செய்துள்ளார். அதன்படி, விலங்குகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் அடாப்ட் மற்றும் கமிட்டி ஸ்ட்ரீட்டீஸ் இந்தியா ஆகிய அமைப்புகளுக்கு இந்த நிதி சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா கடைசியாக 2026 மே மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும், மார்ச் மாதத்தில் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடினார். காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகியிருக்கும் அவர், தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.2027 மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் மூலமே அவர் மீண்டும் போட்டிகளுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


