Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனைவி வெளியிட்ட பிகினி புகைப்படம்.. ஹர்திக் போட்ட ஒற்றை கமெண்ட்.. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

மும்பை: ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான் கோவிக் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் மற்றும் அதற்கு ஹர்திக் செய்துள்ள கமெண்ட்-ம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களது குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வரும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க மறப்பதில்லை.

நட்சத்திர ஜோடி

நட்சத்திர ஜோடி

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா - பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டன்கோவிக் ஆகியோர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜோடியாகும். இவர்கள் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகும். கடந்த வாரம் ஹர்திக்- நடாஷா ஆகியோர் ஜோடியாக மாடலிங் உடையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

பிகினி புகைப்படம்

பிகினி புகைப்படம்

இந்நிலையில் நடஷா வெளியிட்டுள்ள புதிய புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடாஷா அதில், பழைய நாட்களை நினைவுக்கூர்ந்துள்ளார்.

பாண்டியாவின் கமெண்ட்

பாண்டியாவின் கமெண்ட்

இந்த இன்ஸ்டா பதிவுகளுக்கு முதலில் லைக்குகள் சற்று குறைவான வேகத்தில் வந்துக்கொண்டிருந்த நேரத்தில், ஹர்திக் பாண்டியா கமெண்ட் பாக்ஸில் 'ஹார்ட்' எமோஜியை பறக்கவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள நடாஷாவின் இன்ஸ்டா கணக்குக்குள் மளமளவென நுழைந்து லைக் மற்றும் கமெண்ட்-களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இதுவரை இந்த பிகினி புகைப்படத்திற்கு 4.6 லட்சம் லைக்குகள் வந்துள்ளன.

அணியில் இல்லை

அணியில் இல்லை

ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா பேட்டிங் - பவுலிங் என இரண்டிலுமே பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது மனைவி மற்றும் மகனுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Story first published: Tuesday, May 25, 2021, 18:34 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+