பெரும் அவமானத்தைத் தவிர்த்த குருணால் பாண்டியா அணி.. ஹாங்காங் சிக்ஸஸில் கடைசி இடத்தை தவிர்த்த இந்தியா
மாங் காங்: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, 11-வது இடத்துக்கான பிளே-ஆப் போட்டியில் வங்கதேச அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரின் கடைசி இடமான 12-வது இடத்தைப் பிடிக்கும் பெரும் அவமானத்தில் இருந்து தப்பி 11-வது இடத்தைப் பிடித்தது.
மாங் காக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் குருணால் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் கேப்டன் அபு ஹைதர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் வெறும் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய கேப்டன் குருணால் பாண்டியா கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்கதேச அணி 6 ஓவர்களில் 116 ரன்கள் குவித்தது.

பின்னர் 117 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஷஷாங்க் சிங் மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி அதிரடியான தொடக்கம் தந்தது. ஷஷாங்க் சிங் வெறும் 15 பந்துகளில் 1 பவுண்டரி, 7 பிரம்மாண்ட சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்து போட்டி விதிப்படி ரிட்டயர்டு நாட்-அவுட் முறையில் வெளியேறினார். ராகுல் திரிபாதி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது, நிதிஷ் ராணா (10 ரன்கள்) மற்றும் ராகுல் தெவாதியா (5 பந்துகளில் 16 ரன்கள்) ஆகியோர் சிக்சர்களைப் பறக்கவிட்டனர். கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி, 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆல்ரவுண்டராக அசத்தி 3 விக்கெட் வீழ்த்திய குருணால் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஒருவழியாக முதல் வெற்றியைப் பதிவு செய்து இந்திய அணி கடைசி இடத்தைத் தவிர்த்தது.


Click it and Unblock the Notifications


