சென்னை; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்பியதே தோல்விக்கு காரணம் ஆகும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா படுதோல்வியை அடைந்து இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இன்று முதலில் இறங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது . முக்கியமாக பேட்டிங்கில் ரோஹித், கோலி, ராகுல் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. பவுலிங்கில் ஷமி, பும்ரா தொடக்கத்தில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை. கூடுதலாக ட்யூ வேறு சேர்ந்துகொண்டது . இதனால் பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டனர்.

பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். அவர்களின் இந்த சொதப்பல் காரணமாக ஹெட் விக்கெட்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை. இன்று ஹெட் மட்டும் 137 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்பியதே தோல்விக்கு காரணம் ஆகும். உதாரணமாக ,
1. ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சரியாக இருந்தது என்று சொல்லலாம். அதை தாண்டி ஆஸ்திரேலியாவின் கைக்கு வசமாக பந்து சென்று விழுந்தது. மைதானத்தில் பவர் பிளேவில் கூட பந்து சரியாக ஆஸ்திரேலியாவின் கைக்கு சென்றது. எல்லா பக்கமும் பீல்டர்கள் இருக்கும் உணர்வே ஏற்பட்டது.
( 2003ல் ரிக்கி பாண்டிங்.. 20 வருடத்திற்கு கண்ணில் காட்டிய )
2. பிட்ச் முழுக்க முழுக்க முதல் பாதியில் ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக இருந்தது. பிட்ச் வறண்டு இருந்ததால் பேட்டிங் செய்வது கஷ்டமாக இருந்தது. முதல் பாதியில் பிட்ச் பேட்டிங்கிற்கு எதிராக இருந்தது. இரண்டாவது பாதியில் அப்படியே பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.
3. ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த பொது 7.30 மணிக்கு பிட்சில் பனி பொழிய தொடங்கியது. பிட்ச் இதனால் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. இது ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருந்தது .
4 இந்திய அணிக்கு கைக்கு பந்துகள் வரவே இல்லை. பீல்டிங்கில் இந்தியா இருந்த பக்கம் பந்து வரவே இல்லை.

5. தேவையில்லாத பவுண்டரிகள் பல சென்றன. லெக் பை பவுண்டரிகள் அதிக அளவில் சென்றன. இதுவும் கூட இந்திய அணிக்கு எதிராக திரும்பியது.
6. 10 போட்டிகளில் இந்திய அணிக்கு செல்ப் எடுத்த ரோஹித், கோலி, ஷ்ரேயாஸ், ஷமி ஆகியோர் இந்த மேட்சில் சோபிக்காமல் போனது பெரிய அளவில் அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.
7. முக்கியமாக இன்று இந்திய அணிக்கு லக் இல்லவே இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இன்றைய போட்டியில் லக் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது .