For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2003ல் ரிக்கி பாண்டிங்.. 20 வருடத்திற்கு கண்ணில் காட்டிய "ஹெட்".. மீட்சி தட்டி பறித்ததே இவர்தான்!

சென்னை: இந்தியாவின் உலகக் கோப்பை கனவை டிராவிஸ் ஹெட் தட்டி பறித்து இருக்கிறார். 2003ல் ஆஸ்திரேலியா ஆடியதை போல 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து வீழ்த்தி உள்ளது.

2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். கங்குலியின் மோசமான கேப்டன்சி, அவரின் திட்டமிடல் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு டாஸில் அவர் எடுத்த முடிவும் கூட கடும் விமர்சனங்களை சந்தித்தது.

இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து.. 359/2 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் எடுத்து இந்திய அணியை துவம்சம் செய்தார். நல்ல பவுலிங் இருந்தும் சரியான ரொட்டேஷன், பீல்டிங் செட்டப், பிரஷர் போடுதல் போன்ற எந்த பணிகளையும் செய்யாமல்.. கங்குலியின் மோசமான கேப்டன்சியை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் விளாசியது.

Travis head played for Australia like 2003 Ricky Ponting in 2023 World Cup Finals

அந்த போட்டியில் எக்ஸ்டரா மட்டும் 37 ரன்கள் சென்றது. அந்த அளவிற்கு இந்தியாவின் ஆட்டம் மோசமாக இருந்தது.

( இதுல கூட தப்பு செஞ்சா என்னங்க நியாயம்.. கடுப்பாக்கிய பவுலர்கள்.. மேட்சில் நடந்ததை கவனிச்சீங்களா? )

இந்தியா பேட்டிங்: அதன்பின் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். சச்சின் 4 , கங்குலி 24 எடுத்து சொதப்பினர். அதன்பின் ராகுல் டிராவிட் 47 எடுத்தார். அதன்பின் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆக இந்திய அணியின் அடுத்த விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தது. 39.2 ஓவருக்கு 234 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது.

மோசமான மேட்ச்: அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.. அணிக்கு பெரிய காயமாக.. களங்கமாக மாறியது. இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது. . 2003ல் ஆஸ்திரேலியா ஆடியதை போல 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து வீழ்த்தி உள்ளது.

இந்தியாவின் உலகக் கோப்பை கனவை டிராவிஸ் ஹெட் தட்டி பறித்து இருக்கிறார். 2003ல் ரிக்கி பாண்டிங் ஆடியது போல இன்று டிராவிஸ் ஹெட் ஆடி உள்ளார்.

இன்று முதலில் இறங்கிய இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது . முக்கியமாக பேட்டிங்கில் ரோஹித், கோலி, ராகுல் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. பவுலிங்கில் ஷமி, பும்ரா தொடக்கத்தில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Travis head played for Australia like 2003 Ricky Ponting in 2023 World Cup Finals

சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை. கூடுதலாக ட்யூ வேறு சேர்ந்துகொண்டது . இதனால் பவுலர்கள் பலரும் லைன், லென்த் கூட தவறாக போட்டனர்.

பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். அவர்களின் இந்த சொதப்பல் காரணமாக ஹெட் விக்கெட்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை. இன்று ஹெட் மட்டும் 137 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி எளிதாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Sunday, November 19, 2023, 21:22 [IST]
Other articles published on Nov 19, 2023
English summary
Travis head played for Australia like 2003 Ricky Ponting in 2023 World Cup Finals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+