Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு கேட்கவே இல்லையே.. இல்ல என்ன நம்பு.. ஹர்திக் , சாஹா இடையே நடந்த பேச்சு.. இறுதியில் நடந்தது

மும்பை : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான குஜராத் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் கொல்கத்தா அணியிடம் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் பஞ்சாப்பை குஜராத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி களத்தில் சிறப்பாகவே செயல்பட்டனர். பிராப்சிம்ரன் சிங்கை டக் அவுட் ஆக்க, ஷிகர் தவானை 8 ரன்களில் ஆட்டம் இழக்க செய்தனர்.

How wriddhiman saha drs decision change the match in favour of gujarat

இதை அடுத்து ஷார்ட் 36 ரன்களிலும் ராஜபக்ஷா 26 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து ஜித்தேஷ் களத்தில் நின்று அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். ஜித்தேஷ் சர்மா தன்னுடைய இன்னிங்ஸ் வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்தார்.

அப்போது மோகித் சர்மா வீசிய பந்தை அடிக்க முயன்ற போது பேட்டை கடந்து சாகாவிடம் பிடிபட்டது. அப்போது சாஹா நடுவரிடம் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் கொஞ்சம் கூட அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனை அடுத்து சாகா, டி ஆர் எஸ் கேட்குமாறு ஹர்திக் பாண்டியாவிடம் கூறினார்.

ஆனால் பந்து பேட்டில் பட்ட சத்தமே கேட்கவில்லை என ஹர்திக் பாண்டியா மறுத்துவிட்டார். இதனை அடுத்து, இல்லை டிஆர்எஸ் கேள் என்னை நம்பு என சாஹா கூறியதை அடுத்து ஹர்திக் பாண்டியா கடைசி நொடியில் டி ஆர் எஸ் கேட்டார். இதனை அடுத்து ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டது உறுதியானது. இதை அடுத்து ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்தார்.

How wriddhiman saha drs decision change the match in favour of gujarat

இது குஜராத்துக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனால் சாகாவை சக அணி வீரர்கள் கொண்டாடினர். இதேபோன்று தமிழகத்தில் ஷாருக்கான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது சாஹா ஒரு ரன் அவுட் செய்தார். இதேபோன்று ரிஷி தவானை ரன் அவுட் செய்தும் சாஹா அசத்தினார்.

Story first published: Thursday, April 13, 2023, 22:12 [IST]
Other articles published on Apr 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+