Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாணம் ஆனதும் லக் கூடவே வந்துருச்சி.. ருதுராஜ்க்கு கிடைத்த அருமையான வாய்ப்பு.. 2 லட்டு தின்ன ஆசையா

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இது மிகவும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம் டெஸ்ட் அணி தற்போது அதிரடி மாற்றங்களை சந்திக்க போகிறது. அதற்கு முதல் படியாக இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

Huge opportunity for Ruturaj gaikwad as he got chance in india test and odi squad

அவருக்கு பதிலாக ஹனுமா விகாரி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பிளேயிங் லெவனில் புஜாராவுக்கு பதில் ருதுராஜ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 வயதான ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 28 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1941 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஆறு சதங்கள் அடங்கும். சராசரி 42 என்ற அளவில் இருக்கிறது.

ருதுராஜ் ஏற்கனவே இந்திய ஏ அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சதம் அடித்திருக்கிறார். இதனால் புஜாராவுக்கு சரியான தேர்வாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என கருதப்படுகிறது. இந்தத் தொடரில் ருதுராஜ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய சதங்களை அடித்தால் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்துவிடும். இதேபோன்று ஒரு நாள் அணியிலும் ருதுராஜ் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. டி20 ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் எப்படி விளையாடுவார் என்று நமக்கு தெரியும்.

எனினும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். ஒரு வேலை சூரியகுமார் யாதவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தால் அந்த இடத்திற்கு ருதுராஜ் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் முடிந்த பிறகு லக் அடித்திருக்கிறது. எனினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் வழங்கப்பட்ட வாய்ப்பு எல்லாம் அவர் வீணடித்து விட்டார். இதனால் இம்முறையாவது இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Story first published: Friday, June 23, 2023, 16:39 [IST]
Other articles published on Jun 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+