For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓப்பனராக நான் இறங்க ரெடி... நீங்க ரெடியா? ஆசைப்படும் சன்ரைசர்ஸ் சாஹா

மும்பை:ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரராக களமிறங்கவும் தான் தயாராக உள்ளதாக விருத்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட அவர், தென் ஆப்ரிக்கா தொடரின்போது காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் ஐபிஎல் தொடரில் சாஹா விளையாடினார்.

அப்போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர், தோள்பட்டை காயம் மற்றும் கைவிரல் காயத்தால் சுமார் ஒரு வருடம் அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

டெஸ்ட் அணியில் சாஹா

டெஸ்ட் அணியில் சாஹா

அதை சரியாக பயன்படுத்தினார் ரிஷப் பண்ட். சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டதால் சாஹாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற நிலை உள்ளது.

டி 20 தொடர்

டி 20 தொடர்

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த சாஹா, சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் களம் இறங்கினார். ஒரு ஆட்டத்தில் சதம் அடித்து திறமையை அவர் நிரூபித்தார்.

தொடக்க வீரர் சாஹா

தொடக்க வீரர் சாஹா

ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள சாஹா, அந்த அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

பேட் செய்ய விருப்பம்

பேட் செய்ய விருப்பம்

இதுகுறித்து அவர் கூறியதாவது:உண்மையிலேயே நான் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட் செய்வதை விரும்புகிறேன். விக்கெட் கீப்பர்களும் இப்போது நன்றாக பேட் செய்ய வேண்டும்.

 முக்கியமான தொடர்

முக்கியமான தொடர்

ஆனால், இந்த முடிவை அணி நிர்வாகம்தான் எடுக்க வேண்டும். பல மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறேன். நடப்பு ஐபிஎல் தொடர் எனக்கு மிக முக்கியமான தொடராகும் என்றார்.

Story first published: Saturday, March 16, 2019, 13:47 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
I am ready to open the innings for sun risers hyderabad says wriddhiman saha.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+