Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொம்போட அணி வீரர்களை துரத்திக்கிட்டு இருக்க மாட்டேன்... என்னோட கேப்டன்ஷிப் ஸ்டைல் அதுதான்!

துபாய் : அணி வீரர்களை கொம்புடன் துரத்திக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் அவர்களுக்கான முழு சுதந்திரம் இருக்கும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுவே ஐபிஎல் தொடரில் தங்களது அணி வெற்றி பெற முக்கியமான காரணம் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நேற்றைய ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

5 முறை கோப்பை

5 முறை கோப்பை

ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இதுவரை தன்னுடைய அணிக்காக 5 முறை அவர் ஐபிஎல் கோப்பைகளை பரிசளித்துள்ளார். தன்னுடைய அணி வீரர்களை திறமையாக கையாண்டு அவர்களின் முழுத் திறமை வெளிவரும் வகையில் அவர்களை வழிநடத்தி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

நேற்றைய ஐபிஎல் 2020 தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டு 5வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த முடிவு ஓரளவு முன்னமே கணிக்கப்பட்டதற்கு காரணம் அந்த அணியின் சிறப்பான ஆளுமைதான்.

5வது ஐபிஎல் கோப்பை

5வது ஐபிஎல் கோப்பை

தொடரில் மற்ற அணிகள் சிறப்பாக வெற்றி பெறும்போதெல்லாம் இந்த அணி கோப்பையை கைப்பற்றுமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆயினும் தங்களை வெற்றிபெற யாராலும் முடியாது என்பதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிரூபித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

வெற்றிக் கொண்டாட்டம்

இந்த கொண்டாட்டத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிவிட்டுள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் கொம்பை கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை துரத்திக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயிற்சியாளர்களுக்கு நன்றி

பயிற்சியாளர்களுக்கு நன்றி

வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Story first published: Wednesday, November 11, 2020, 12:22 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+