மாட்டேன்… மாட்டேன்.. நான்தான் ஓப்பனிங் பேட்ஸ்மென்.. ஐபிஎல்லில் அடம்பிடிக்கும் அந்த வீரர்
மும்பை: ஐபிஎல் தொடரின் 12வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிறேன் என்று கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் நான் தொடக்க வீரராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் மிக உறுதியாக உள்ளேன். உலக கோப்பை தொடர் நெருங்கி விட்டது.

நான்தான் தொடக்க வீரர்
இந்திய அணியிலும் தொடக்க வீரர் நான்தான். எனவே இந்த முடிவை எடுத்து உள்ளேன். முன் வரிசை வீரராக விளையாடும்போது தான் அதிக ரன்களை குவித்திருக்கிறேன்.

நடுவரிசை வீரர்கள்
அணி நிர்வாகத்துக்கும் இது நன்றாகவே தெரியும். நடு வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது, இந்த முடிவை எளிதாக்கிவிட்டது.

வீரர்களுக்கு கட்டாயம்
இந்திய வீரர்கள் உலக கோப்பை வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உண்மையிலேயே சவாலான ஒன்று.

அனுபவம் உள்ளது
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தொடர்களில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. எனவே, அதை என்னால் மிக எளிதாக சமாளிக்க முடியும்.

ஓய்வு தேவை
உடல்தகுதியை பராமரிப்பது மற்றும் பணிச்சுமையை கையாள்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் வேறுபடும். ஓய்வு தேவைப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட வீரர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications