Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நாள்ல 3 போட்டிகள்... அப்பப்பா..? அதுக்குள்ள இவ்ளோ சாதனைகள்...!! வாரே வாஹ்..!!

மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் 2 நாட்களில் 3 போட்டிகளில் நடைபெற்றன. மிரட்டலான பேட்டிங், அற்புத பந்துவீச்சு, டிஆர்எஸ் ரிவ்யூ என பல சுவாரசியமான சம்பவங்கள் இந்த தொடரில் அரங்கேறி இருக்கின்றன.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொண்டது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தனர்.

சென்னை அணி

சென்னை அணி

அந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெங்களூரு 70 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. சென்னை அணி ஒருவழியாக தடுமாறி அதில் வெற்றி பெற்றது.

ரெய்னா சாதனை

ரெய்னா சாதனை

அந்த அணி வீரர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிருக்கும் அவரது உலக கோப்பை வாய்ப்பு ஏற்கனவே கைவிட்டு போய்விட்டது.

ஹர்பஜன் அற்புதம்

ஹர்பஜன் அற்புதம்

ஐபிஎல் தொடரில் caught and bowled முறையில் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் ஒரு சாதனையை நிகழ்த்தினார். 11 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சென்னை அணியின் ஹர்பஜன் சிங்.

வார்னரின் வார்னிங்

வார்னரின் வார்னிங்

பந்தை சேதப்படுத்தினார் என்ற புகாரில் தண்டனைக்குள்ளானவர் டேவிட் வார்னர். தடைக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பினார். ஐபிஎல் தொடரில் 50 ரன்களுக்கும் அதிகமாக அடித்த வீரர்களில் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 37 அரை சதம், 3 சதம் அடித்துள்ளார்.

விளாசி பண்ட்

விளாசி பண்ட்

அடுத்து டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட். ஐபிஎல் போட்டியில் தனது 9 அரை சதம் அடித்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் விளாசினார். அவரது இந்த காட்டடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

பத்திரமான வீரர்

பத்திரமான வீரர்

ஐபிஎல் தொடரில் தனது 13வது அரை சதத்தை அடித்தார் மும்பை அனி வீரர் யுவ்ராஜ் சிங் . இளம் வீரர் ரிஷப் பண்டின் காட்டடி ஆட்டத்தை பார்த்த அவர், பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய வீரர் என்று பாராட்டினார்.

7வது தோல்வி

7வது தோல்வி

2013 முதல் 2019 வரை நடந்த ஐபிஎல் தொடரில் தமது முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது . மொத்தம் 7 முறை தொடக்க போட்டியில் வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதேபோல, தமது தொடக்க போட்டியில் 7வது தொடர்ந்து தோல்வி அடைந்த அணி என்ற பெயர் மும்பை அணிக்கு கிடைத்துள்ளது.

Story first published: Monday, March 25, 2019, 16:21 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+