Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs NZ A: 2வது டெஸ்டில் துருவ் ஜூரல் அபாரம்.. 99 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 99 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களும் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

கிறைஸ்ட்சர்ச்சில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி ஃபிரேசர் ஷீட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா ஏ அணி 87/1 என்ற கணக்கில் இருந்தது.

IND A VS NZ A

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சாய் சுதர்சன் 41 ரன்களில் மேக்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய படிக்கல் 101 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், 131 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா ஏ அணி, அடுத்தடுத்து 7 ரன்கள் இடைவெளியில் யாஷ் ரத்தோடு 13 ரன்கள், படிக்கல் 80 ரன்களும் மற்றும் ரவிச்சந்திரன் ஸ்மரன் டக் அவுட்டாகியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வாஷிங்டன் சுந்தரும் ஃபிரேசர் ஷீட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

AUS vs SA: ரபாடா மாபெரும் சாதனை.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் அபாரம்

AUS vs SA: ரபாடா மாபெரும் சாதனை.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் அபாரம்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடிய கேப்டன் துருவ் ஜூரெல், மானவ் சுதாருடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தார். சுதார் ஆட்டமிழந்த பிறகு, 8வது விக்கெட்டுக்கு ஜூரெலுடன் இணைந்த ஆகாஷ் தீப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 18.4 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்துள்ளது.

பாகிஸ்தானுக்கு செல்ல பயமா? இங்கிலாந்து அணியிலிருந்து கம்பி நீட்டிய பீட்டர்சன்

Also Read

பாகிஸ்தானுக்கு செல்ல பயமா? இங்கிலாந்து அணியிலிருந்து கம்பி நீட்டிய பீட்டர்சன்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 291/7 ரன்கள் எடுத்துள்ளது. ஜூரெல் 155 பந்துகளில் 99 ரன்களுடன் சதத்தை எதிர்நோக்கி களத்தில் உள்ளார். நியூஸிலாந்து ஏ அணியின் பந்துவீச்சாளர் ஃபிரேசர் ஷீட் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Story first published: Saturday, October 31, 2026, 18:11 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+