Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்கள் எத்தனை பேர்?

சிட்னி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடந்து முடிவடைந்து இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ரசிகர்களுக்கு உச்சகட்ட பொழுதுபோக்கை வழங்கிய இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் 10 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 448 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் இரண்டு சதம் ஒரு அரை சதம் அடங்கும்.

ind vs aus jasprit bumrah rohit sharma virat kohli

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் ஜெய்ஷ்வால் பிடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 391 ரன்கள் குவித்து இருக்கிறார்.இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் இருக்கிறார்.இவர் ஐந்து போட்டிகள் விளையாடி 314 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும்.

இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டி இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 298 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுல் இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் விளையாடி 276 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும்.

ஆறாவது இடத்தில் பண்ட் பிடித்திருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 255 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். 7வது இடத்தில் லாபஸ்சென் இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 232 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். எட்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் கேரி இருக்கிறார்.

இவர் ஐந்து டெஸ்டில் 216 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 190 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜா இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 184 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும்.

Story first published: Sunday, January 5, 2025, 11:35 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+