Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் - தவான் பேட்டிங் ஆடும் போது நடுநடுவே வந்த சச்சின் - சேவாக்.. ரசிகர்கள் ஹேப்பி!

லண்டன் : இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து வந்த இந்திய ரசிகர்கள், இடை இடையே வந்து போன சச்சின் - சேவாக்கை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன பரபரப்பான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. இந்தப் போட்டியைக் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

அப்போது ரோஹித் - தவான் மிகவும் நிதானமாக ரன் சேர்த்து வந்தார்கள். இதனால், பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தார்கள். ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் - பாட் கம்மின்ஸ் 140+ கிமீ வேகத்தில் பந்துவீசி இந்திய துவக்க வீரர்களை மிரட்டி வந்தனர்.

சச்சின் - சேவாக் வர்ணனை

சச்சின் - சேவாக் வர்ணனை

அதனால், ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி விக்கெட் விழாமல் இருக்க தடுப்பாட்டம் ஆடினார்கள். அப்போது ஹிந்தி ஒளிபரப்பில் வீரேந்தர் சேவாக் - சச்சின் டெண்டுல்கர் வர்ணனை செய்து வந்தனர். சரியாக இந்திய துவக்க வீரர்கள் ஆடி வரும் போது, முன்னாள் துவக்க வீரர்கள் இருவரும் வர்ணனை செய்ய இணைய.. இதைக் கண்ட ரசிகர்கள் குஷியானார்கள்.

சேவாக்கிற்கு அடுத்து..

சேவாக்கிற்கு அடுத்து..

சச்சின் - சேவாக் வர்ணனையை கண்ட ரசிகர்கள், சேவாக்கிற்குப் பின் அவரைப் போல முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடும் துவக்க வீரர் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என கூறி தங்கள் வேதனையை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.

சச்சின் மயக்கம்

சச்சின் மயக்கம்

சச்சின் ரசிகர்களுக்கு கேட்கவா வேண்டும்? ஹிந்தி புரியாதவர்கள் கூட, அவரது ஹிந்தி வர்ணனை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சச்சின் - சேவாக் துவக்க ஜோடிக்கு பின், இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த துவக்க ஜோடி ரோஹித் சர்மா - ஷிகர் தவான் தான்.

சேவாக் அதிரடி

சேவாக் அதிரடி

இவர்கள் இருவரும் சில ஓவர்கள் நிதானம் காட்டி விட்டு அடித்து ஆடுவார்கள். ஆனால், சச்சின் - சேவாக் துவக்கம் அளித்த போது, சச்சின் நிதானமாக துவங்குவார். ஆனால், சேவாக் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரி அடிக்கத் துவங்கி விடுவார்.

சமாதானம்

சமாதானம்

அவர் போன்ற ஒரு துவக்க வீரர் இந்தியாவில் தற்போது இல்லை என வருத்தப்பட்ட ரசிகர்கள், ரோஹித் - தவான் இந்தப் போட்டியில் 10 ஓவர்களுக்குப் பின் கொஞ்சம் வேகம் கூட்டிய பின் சமாதானம் அடைந்தனர்.

Story first published: Sunday, June 9, 2019, 17:00 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+