Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீரை தயவு செய்து செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பாதீர்கள்.. மரியாதையே இல்ல -சஞ்சய் மஞ்சுரேக்கர்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று மும்பையில் இருந்து புறப்பட்டு பெர்த் நகருக்கு செல்கின்றது.

இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கௌதம் கம்பீர் பல்வேறு கேள்விகளுக்கு கொஞ்சம் திமிராக பதில் அளித்தார்.

ind vs aus rohit sharma virat kohli jasprit bumrah

குறிப்பாக இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கம்பீர் சமூக வலைத்தளத்தில் சொல்லப்படும் விமர்சனங்கள் எல்லாம் என்னை பாதிக்காது.இந்த பணி எவ்வளவு கடினம் என்று தெரிந்துதான் தாம் வந்ததாக காட்டமாக பதில் அளித்தார். இதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்தும் கடுமையாக அவர் சாடினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், கம்பீருக்கு இனி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க கூடாது என்று பிசிசிஐக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை நான் பார்த்தேன். கம்பீர் இது போன்ற பணிக்கு எல்லாம் அனுப்பக்கூடாது.

இந்த விஷயத்தில் பிசிசிஐ கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். கம்பீர் எப்போதுமே அணி விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திரை மறைவில் இருந்து வேலை பார்க்க வேண்டுமே, தவிர அவர் செய்தியாளர்களை சந்திப்பது சரியாக இருக்காது. ஏனென்றால் அவர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இதனால் ரோகித் சர்மாவும் அகார்கரும் செய்தியாளர்களை சந்திக்க பிசிசிஐ அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 11, 2024, 16:29 [IST]
Other articles published on Nov 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+