Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிட்னி டெஸ்டில் அஸ்வினை மிஸ் செய்த இந்தியா.. தலைவன் மட்டும் இருந்திருந்தா, கதையே வேற! கம்பீரின் தவறு

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அணியின் டாப் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு பல போட்டிகளில் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

கடந்த இரண்டு முறை கூட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரரான அஸ்வின் சொல்லி வைத்தது போல் ஸ்மித் விக்கெட்டை எடுத்தார்.

ind vs aus rohit sharma jasprit bumrah virat kohli

இதனால் அஸ்வினின் அனுபவம் நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தான் அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பயிற்சியாளர் அஸ்வினை தொடர்ந்து அணியில் சேர்க்காமல் பெஞ்சில் அமர வைத்திருந்தார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

மற்ற போட்டிகளில் அஸ்வின் சேர்க்காமல் ஜடேஜா,வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் கடுப்பான அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பாதியில் தாயகம் திரும்பிவிட்டார்.அப்போது பலரும் அஸ்வின் இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்கள்.

ஏனென்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பலரும் கருதினர். ஆனால் அஸ்வின் ஓய்வு பெற்றதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தற்போது சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மட்டும் இருந்திருந்தால் அவர் முன்பே வந்து வீச வந்து இருப்பார்.

இதன் மூலம் ஸ்மித் போன்ற வீரர்களில் விக்கெட்டை அஸ்வின் விரைவில் வீழ்த்தி இருப்பார். அது மட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கும் இது போன்ற ஆடுகளங்களில் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கும். இதனால் கம்பீர் செய்த தவறால்தான் அஸ்வின் இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Story first published: Saturday, January 4, 2025, 7:46 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+