Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

139 ஆண்டுகளாக இருந்த சாதனையை உடைத்த பும்ரா.. இது யாக்கர் கிங்கின் கோட்டை!

மெல்போர்ன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக தற்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளங்கி வருகிறார். தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் தனி ஆளாக ஆட்டத்தையே பும்ரா மாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.

ind vs aus jasprit bumrah virat kohli rohit sharma

ஆஸ்திரேலிய ஆடுகளம் எப்போதுமே வீரர்களின் திறமையை சோதிக்கும். ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டாலும் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடக்கூடிய வாய்ப்பையும் கொடுக்கும். அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பும்ரா மட்டும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் பும்ரா 29 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது.பழம்பெரும் வரலாறு கொண்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில் 90,000 மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க முடியும்.

இப்படி புகழ்பெற்ற இந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு பவுலர்கள் பட்டியலில் பும்ரா 139 ஆண்டுகால சாதனையை முறியடித்து இருக்கிறார். 1881 முதல் 1885 ஆம் ஆண்டு வரை மெல்போர்னில் விளையாடிய இங்கிலாந்து வீரர் வில்லியம் பேட்ஸ், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

தற்போது பும்ரா 139 ஆண்டுகள் பிறகு மெல்போர்ன் மைதானத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி 23 விக்கட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை உடைத்திருக்கிறார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்றால் அது இங்கிலாந்தை சேர்ந்த பர்னிஸ்தான். அவர் மெல்போர்ன் மைதானத்தில் 1902 முதல் 1912 ஆம் ஆண்டு வரை விளையாடி 5 டெஸ்டுகளில் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Sunday, December 29, 2024, 10:23 [IST]
Other articles published on Dec 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+