சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்து வீச வரவில்லை. இதனால் மற்ற இந்திய அணி பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி வருகிறார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இந்த சூழலில் இந்திய அணி முதலில் 185 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து நான்கு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 157 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மோசமான ஃபார்ம் காரணமாக வெளியேறினார்.
இதனால் பும்ரா இந்த ஆட்டத்தில் கேப்டன் ஆக களம் இறங்கினார். பும்ரா முதல் இன்னிங்ஸில் பத்து ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட் வீழ்த்திய நிலையில் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனால் பும்ரா மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் அதில் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது பும்ரா களத்திற்கு வந்தார். இதனால் பந்துவீச்சில் பும்ரா ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் பும்ரா பந்து வீச வரவில்லை. இதனால் விராட் கோலியை கேப்டனாக அணியை வழி நடத்தினார்.
இந்த சூழலில் முஹமது சிராஜும்,பிரசித் கிருஷ்ணா இருவருமே பல உதிரி ரன்களை கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்ற முதல் மூன்று ஓவர்களுக்கு 33 ரன்களை இந்திய வீரர்கள் விட்டுக் கொடுத்தனர்.இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி டிவியை ஆப் செய்து விட்டனர். 162 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்கள் எல்லாம் 50 ரன்கள் எட்டி டி20 கிரிக்கெட் போல் ரன்களை சேர்த்து வருகிறது.