Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா இனி கேப்டனாக விளையாடுவாரா? உண்மையை சொன்ன கேப்டன் பும்ரா.. டாஸ் வீசும் போது விளக்கம்

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா என்று களமிறங்கி இருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும்.

இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஐந்து இன்னிங்சில் வெறும் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று பரவலாக கருத்து எழுந்தது. இந்த சூழலில் ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டிருந்தார்.ரோகித் எதிர்காலம் குறித்து டாஸ் வீசும் போது கேப்டன் பும்ரா சொன்ன விஷயம் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்.இந்த தொடரில் நாங்களும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். மெல்போர்ன் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்பட்டிருக்கும் புற்கள் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை கொடுக்காது என நினைக்கின்றேன்.

எங்கள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான். இந்த போட்டியில் ரோகித் சர்மா ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார். எங்கள் அணியில் ஒற்றுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது இது ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகாஷ் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கில்லும் விளையாடுகின்றனர் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.இதன் மூலம் ரோகித் சர்மா நீக்கப்படவில்லை என்றும் அவரே தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பும்ரா கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது எனினும்,இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் ஏற்கவில்லை.
ரோகித்தை நீக்கிவிட்டு அதை சமாளிக்க இந்திய அணி நிர்வாகம் சப்பை கட்டு கட்டுவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

Story first published: Friday, January 3, 2025, 6:27 [IST]
Other articles published on Jan 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+