Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா செய்த தில்லாலங்கடி வேலைகள்

சிட்னி : கிரிக்கெட் உலகில் ஆண்ட பரம்பரை போல் விளங்கி வந்த ஆஸ்திரேலிய அணியை கடந்த இரண்டு முறை அவர்களுடைய சொந்த மண்ணில் வைத்தே இந்திய அணி வதம் செய்தது. இதனால் இம்முறை ஹாட்ரிக் சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி வந்தது.

இதன் காரணமாக இந்திய அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணி இம்முறை பல தில்லாலங்கடி வேலையை செய்திருக்கிறது. அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.தொடர் அட்டவணை தயாரிப்பதில் இருந்து இந்திய வீரர்கள் பயிற்சி செய்ய ஆடுகளம் வழங்கும் வரை அனைத்திலுமே ஆஸ்திரேலிய அணி தங்களுடைய வேலையை காட்டி இருக்கிறது.

ind vs aus jasprit bumrah rohit sharma virat kohli vs


எப்போதுமே பிரிஸ்பேன் மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும். ஆனால் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் வேண்டுமென்றே கடந்த முறை போல் இம்முறையும் பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வைத்தது.

இதன் மூலம் இந்த வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா தோற்றுவிடும் என ஆஸ்திரேலியா தப்பு கணக்கு போட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சாதகமான அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே பிங்க் நிற பந்தை வைத்து பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தியது.

இதன் மூலம் நல்ல பார்மில் இருந்த இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி தோல்வியை தழுவினர். இதேபோன்று சிட்னி மைதானத்தில் ஆடுகளம் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்திய அணியை ரன்கள் அடிக்க வைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆடுகளத்தில் அதிக அளவு புற்களை வைத்து இந்தியாவை பழி தீர்த்தது.

இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு முற்றிலும் இந்தியாவுக்கு சென்றது. இதேபோன்று மெல்போர்ன் மைதானத்திலும் இந்திய அணி எப்போதுமே கடந்த இரண்டு முறை வெற்றியை கண்டது. இதனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்தியாவுக்கு பயிற்சி செய்ய ஒரு மோசமான ஆடுகளத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கியது.

ஆனால் இதையும் மீறி தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நன்றாக ரன் குவித்தது.ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி செஷனில் ஏழு விக்கெட்டுகளை கொத்தாக இந்தியா இழந்தது. மேலும் இந்திய அணி பந்தை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டை வைத்தது, விமான நிலையத்தில் விராட் கோலி குடும்பத்தை புகைப்படம் எடுத்த போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததை பூதாகரமாக மாற்றியது, இந்திய வீரர்கள் பயிற்சி செய்தபோது பல்வேறு ரசிகர்களை அனுமதித்து பயிற்சியை கெடுத்தது என பல மைண்ட் கேம்சில் ஆஸ்திரேலியா ஈடுபட்டது. இது எல்லாம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

Story first published: Sunday, January 5, 2025, 19:18 [IST]
Other articles published on Jan 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+