Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS-பும்ராவுக்கு கேப்டன் பதவி கடினமாக இருக்கும்.. ரிக்கி பாண்டிங் கருத்து

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் அதிகபட்சமாக 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.

குறைந்தபட்சம் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் ஆவது இந்தியா வெல்ல வேண்டும். இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா நாடு திரும்பிவிட்டால் இந்திய அணியின் கேப்டனாக யார் வரப்போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ind vs aus rohit sharma virat kohli jasprit bumrah

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா இல்லை என்றால் கேப்டன் பதவியை பும்ரா ஏற்பார் என நினைக்கின்றேன். ஆனால் கேப்டன் பதவி நிச்சயம் பும்ராவுக்கு கடினமாக இருக்கும். பாட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற போது அவர் எவ்வளவு ஓவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசுவார் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

அதே போல் தான் பும்ரா கேப்டனாக பதவி ஏற்றால், அவர் எந்த அளவுக்கு பந்து வீசுவார். இல்லையென்றால் தொடர்ந்து அவரே பந்துவீசி விக்கெட் எடுக்க முயற்சி செய்வாரா? இல்லை போதுமான ஓவர்களை வீசுவாரா என்ற சந்தேகம் இருக்கின்றது. எனினும் பும்ராவுக்கு அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும். இதன் மூலம் எப்போது பந்து வீசவேண்டும்? எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்கு புரியும் என நினைக்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் பும்ரா தனியாக இல்லை. இந்திய அளவில் பல அனுபவமிக்க வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் நிச்சயம் பும்ராவுக்கு வழி காட்டுவார்கள். எவ்வளவு தான் நாம் கிரிக்கெட் விளையாடினாலும், சில விஷயங்களை மற்றவரிடம் கேட்டு அதன்படி செயல்படுவது எந்த தவறும் இல்லை. ஏனென்றால் நாம் எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

எனினும் பலரும் பல அறிவுரைகளை கூறினாலும், அதில் எது சிறந்தது என்பதை கேப்டன் தான் முடிவு எடுக்க வேண்டும். பும்ரா போற வீரர் கடினமான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்தியா அணியின் பந்துவீச்சு படையின் தலைவராக பும்ரா நீண்ட காலமாக இருந்து வருகிறார். டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பும்ரா முக்கிய வீரராக விளங்குகிறார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 10, 2024, 18:56 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+