For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BGT 2024-25 : பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் யார்?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

இந்த தொடரில் இந்தியாவின் பும்ரா மட்டும் தனி ஆளாக நின்று கடுமையாக போராடி இருந்தார். எனினும் இந்தியா இந்த தொடரில் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ind vs aus jasprit bumrah rohit sharma virat kohli

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இருக்கிறார். பும்ரா இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பும்ரா இந்த தொடரில் 908 பந்துகளை வீசி இருக்கிறார். மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டு முறை நான்கு விகட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். இவர் ஐந்து போட்டிகளில் 25 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதில் ஒரு முறை ஐந்து விக்கெட்டுகள் அடங்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் போலந்து இருக்கிறார். இவர் மூன்று டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் சிராஜ் இருக்கிறார். சிராஜ் 5 டெஸ்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் நாதன் லயன் இருக்கிறார். இவர் ஐந்து டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இருக்கிறார். இவர் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்.

இவர் ஒரு டெஸ்டில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நிதிஷ் குமார் இருக்கிறார். இவர் ஐந்து போட்டியில் களம் இறங்கி விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இந்த தொடரில் பத்தாவது இடத்தில் ஆகாஷ் தீப் இருக்கிறார். இவர் இரண்டு டெஸ்டில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளரான ஜடேஜா மூன்று டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் மூன்று டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 5, 2025, 12:00 [IST]
Other articles published on Jan 5, 2025
English summary
Ind vs aus- Top 10 Wickets by a bowlers in Border gavaskar trophy 2024-25 பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+