Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- ஆப்சென்ட் ஆன விராட் கோலி, பும்ரா, அஸ்வின்.. கடுப்பான கம்பீர்! இதயத்தை வென்ற ராகுல், பண்ட்

பெர்த்: 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் இன்னும் 11 நாட்களில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஏனென்றால் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இல்லையென்றால் மற்ற அணிகளின் உதவிகள் தேவைப்படும். ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

ind vs aus rohit sharma virat kohli jasprit bumrah

அது மட்டுமல்லாமல் இந்திய அணி தற்போது மோசமான பார்மில் இருக்கின்றது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆகி இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாலில் சாதிப்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் எதிர்காலம் இந்த தொடரை நம்பியே இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பே விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு தன்னிச்சையாக வந்து விட்டார். இதனால், விராட் கோலி ரன் பசியில் இருப்பதால் ஆஸ்திரேலியாலில் பயிற்சி செய்வதற்காக அவர் முன்பே வந்துவிட்டார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் விராட் கோலி வந்து மூன்று நான்கு நாட்கள் ஆகியும் அவர் இதுவரை பயிற்சி செய்யவில்லை.

அது மட்டும் அல்லாமல் மற்ற இந்திய அணி வீரர்களுக்கான ஆப்ஷனல் பயிற்சி முகாம் நடந்தது. அதாவது இதில் விருப்பம் உள்ள வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பெயருக்கு தான் அப்படி என்றாலும், பல சீனியர் வீரர்கள் ரன் பசியில் சாதிக்க வேண்டும் என உத்வேகத்தில் இதுபோன்ற பயிற்சி முகாமில் பங்கேற்று தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள்.

விராட் கோலி எப்போதுமே அப்படித்தான் செய்வார். தற்போது அவர் மீது கடும் நெருக்கடி உள்ள நிலையில் அவர் தீவிர பயிற்சியை மேற்கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விராட் கோலி இந்த பயிற்சிக்கு வரவே இல்லை அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அஸ்வின், பும்ரா போன்ற வீரர்களும் பயிற்சி செய்ய வரவில்லை.

இது ஆப்ஷனல் என்பதால் பிரச்சினை இல்லை என்றாலும் சீனியர் வீரர்கள் இந்த முகாமில் பங்கேற்பார்கள் என்று கம்பீர் எதிர்பார்த்து தற்போது விரக்தி அடைந்து இருக்கிறார். அதே சமயம் கே எல் ராகுல் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் வெறிகொண்டு இந்த ஆப்ஷனல் பயிற்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, November 13, 2024, 17:54 [IST]
Other articles published on Nov 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+