மும்பை : இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் காலம் காலமாக ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தி வந்ததுதான். கங்குலி காலத்திலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என ஒரு அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு என ஒரு அணி என்று இரண்டு அணிகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருவார்.
தோனி காலத்தில் அது கண்டிப்பாக பாலோ செய்யப்பட்டது. உதாரணத்திற்கு டிராவிட், லக்ஷ்மன், போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் விளையாடுவார்கள். இதே போன்று ரகானே, புஜாரா, விஜய் போன்ற வீரர்களும் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பிரத்தேகமாக இந்திய அணி பயன்படுத்தியது.

இதற்கு காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என தனி ஒரு திறமை வேண்டும். டி20 ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடும் வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டு கொண்டு வந்தால் அவர்கள் விரைவில் ஆட்டம் இழக்க கூடும். அது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் ரஞ்சி போட்டிகளில் தொடர்ந்து ஆடவேண்டும்.
இதனால் டெஸ்ட்க்கு என தனி பேட்ஸ்மேன்களை உருவாக்குவது நல்லது. ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா காலத்தில் இந்த ஃபார்முலா தலை சுற்றி வீசப்பட்டு டி20,ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒரே வீரர்களை பயன்படுத்தி வந்தார்கள்.இது தவறான நடைமுறை என்றும், இனி விராட் கோலி, ரோகித் சர்மா, கில் போன்ற வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலாக டெஸ்ட் போட்டிக்கு என தனி ஒரு அணியை பிசிசிஐ வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இருந்து உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதன்படி இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் தமிழக வீரர் சாய் சுதர்சன். சாய் சுதர்சன் நடப்பு ரஞ்சிப் போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 295 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.
சாய் சுதர்சனுக்கு தற்போது ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. சாய் சுதர்சனுக்கு 23 வயது தான் ஆகிறது. மேலும் அவர் சுழற் பந்து வீசும் செய்வார். இதுவரை 28 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 1948 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஏழு சதமும், ஐந்து அரை சதமும் அடங்கும்.
சாய் சுதர்சனின் சராசரி 41 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று மற்றொரு இளம் தமிழக வீரரான ஆண்ட்ரே சித்தார்த் அபாரமாக விளையாடி வருகிறார். சித்தார்த்துக்கு 18 வயது தான் ஆகிறது. இதுவரை ஐந்து முதல் தர போட்டிகளில் விளையாடி 372 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அதிகபட்ச ஸ்கோர் 94 ரன்கள் ஆகும்.இதுவரை நான்கு அரைசதம் அடித்துள்ள சித்தார்த் 93 என்ற அளவில் சராசரியை வைத்து இருக்கிறார். எனினும் ஆண்டிரே சித்தார்த் எதிர்காலத்திற்கான வீரர் என்பதால் அவரை தற்போது இருந்தே இந்திய ஏ அணி போன்ற தொடர்களில் பயன்படுத்தி மெருகேற்ற வேண்டும்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே முச்சதம் அடித்துள்ள கருண் நாயர். கடைசியாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு விளையாட்டினார். இந்த நிலையில் கருண் நாயர்க்கு 33 வயது ஆகிறது. தற்போது அவர் செம பார்மில் இருக்கின்றார். விஜய் ஹசாரே கோப்பையில் தற்போது அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு சதம் அடித்திருக்கிறார்.
இதனால் கருண் நாயரை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பயன்படுத்தி பார்க்க வேண்டும். இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் ரஜத் பட்டி தார். இவர் நடப்பு ரஞ்சிப் போட்டியில் 5 போட்டிகளில் விளையாடி 427 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும். இதில் அவருடைய சராசரி 53 என்ற அளவில் இருக்கிறது.
ரஜத் பட்டிதார் ஏற்கனவே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவர் அதில் சரியாக விளையாடவில்லை என நீக்கப்பட்டார். எனினும் பட்டிதாருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். 31 வயதான பட்டிதார் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே போன்றவரின் இடத்தை நிச்சயம் பிடிப்பார். முதல் தர போட்டிகளில் ரஜத் பட்டிதார் 4636 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் 13 சதம் ,23 அரை சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹனுமா விகாரி.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனவே உருவாக்கப்பட்ட வீரர் தான் ஹனுமா விகாரி.ஆனால் அவர் ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஹனுமா விகாரி போன்ற வீரரை இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று சர்ஃபாஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், அனுமூல் பிரித் சிங் போன்ற பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் டெஸ்ட் அணியை தனியாக தயார் செய்வதே சிறப்பானதாக இருக்கும்.