For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND VS ENG - 5வது டெஸ்டில் வெற்றி பெற இந்தியா எவ்வளவு ரன் அடிக்க வேண்டும்.. இதை செய்தால் போதும்

IND VS ENG : இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறது என்ற செய்தி வெளியான உடனே அந்த நாட்டு ரசிகர்கள் ஓவராக ஆட்டம் போட்டனர். இதற்கு காரணம் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை எந்த ஒரு அணியும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் வீழ்த்தியதில்லை.

கடைசியாக இங்கிலாந்து அணி தான் இந்த சாதனையை செய்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது பேஸ் பால் என்ற யுத்தியை பயன்படுத்தி எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்ததால் இந்தியாவை இம்முறை இங்கிலாந்து வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

Ind vs Eng - 5th test India need to score 400 Runs in 1st innings to win

போதாத குறைக்கு விராட் கோலி, ராகுல், ஷமி போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விலகினர். இன்னும் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றினர்.இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று மானத்தை காப்பாற்ற வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் அதிரடியை காட்டினர். ஜெய்ஸ்வான் 58 பந்துகளில் 52 ரன்களும், ரோஹித் சர்மா 83 பந்துகளில் 52 ரன்களும் எடுத்திருக்கிறார்கள்.

தற்போது ரோகித் சர்மாவுடன் கில் 26 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணி 83 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆட்டம் தொடங்கிய சில ஓவர் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகும். அதனை இந்தியா சமாளித்து விட்டு தொடர்ந்து அதிரடியை காட்ட வேண்டும். தற்போது முதல் இலக்காக 83 ரன்கள் இந்தியா விக்கெட் இழப்பின்றி கடந்தாக வேண்டும். அதன் பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 200 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும்.

முதலில் இன்னிங்ஸில் 400 ரன்கள் தொட வேண்டும் என்ற இலக்கில் இந்தியா விளையாடி அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை கூட பெற முடியும். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுக்கு நல்லது.

Story first published: Friday, March 8, 2024, 8:00 [IST]
Other articles published on Mar 8, 2024
English summary
Ind vs Eng - 5th test India need to score 400 Runs in 1st innings to win IND VS ENG - 5வது டெஸ்டில் வெற்றி பெற இந்தியா எவ்வளவு ரன் அடிக்க வேண்டும்.. இதை செய்தால் போதும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+