Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியையே ஃபாலோ செய்கிறோம்.. தோனி - பிளெம்மிங்கை போல் நாங்களும்.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி!

விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணியின் கேப்டனான நானும், பயிற்சியாளர் மெக்கல்லமும் சிஎஸ்கே அணியின் தோனி - பிளெம்மிங் கூட்டணியை போலவே செயல்பட்டு வருவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றியை பெற்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே பென் ஸ்டோக்ஸ் வெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக விளையாடிய 19 போட்டிகளில் 14 வெற்றிகளை பெற்று அபரிதமான சாதனையை படைத்துள்ளார்.

IND vs ENG : I and Mccullum trying to follow CSK duo MS Dhoni and Fleming says England Captain Ben Stokes


இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லமும் முக்கியக் காரணம். பேஸ் பால் யோசனையை கொண்டு வந்ததோடு, அதற்கேற்ப வீரர்களை மனதளவில் தயார்ப்படுத்தி ஒவ்வொரு வெற்றிகளையும் ஈட்டி வருகிறார். நீண்ட காலத்திற்கு பின் கேப்டனுக்கு இணையாக பயிற்சியாளர் மீதும் வெளிச்சம் பட்டு வருகிறது. எப்படி இவர்களால் இது சாத்தியமாக்கப்பட்டது என்ற ரசிகர்கள் பலரும் வியந்து வருகின்றனர்.


நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான ஜான் ரைட், ஸ்டீபன் பிளெம்மிங் வரிசையில் மெக்கல்லமும் மிகச்சிறந்த பயிற்சியாளர் என்ற நிலையை எட்டிப்பிடித்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். என்னால் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் நாங்கள் தொடரை வென்றோம்.


ஆனால் ஐபிஎல் தொடரின் போது, தோனி மற்றும் ஸ்டீபன் பிளெம்மிங் இருவரும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. இவர்கள் இருவருடனும் ஏற்கனவே புனே அணிக்காக விளையாடிய போது இருந்திருக்கிறேன். இவர்கள் இருவரும் எப்படி புரிந்து கொண்டு ஒன்றாக இணைந்து அத்தனை முடிவுகளையும் எடுக்கிறார்கள் என்பது அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.


கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருவரும் எடுக்கும் முடிவுகள் மீது எப்படி அவ்வளவு நம்பிக்கை வருகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த புரிதல் உள்ளது. அதனை தான் இங்கிலாந்து அணிக்காக நானும், மெக்கல்லமும் செய்ய விரும்புகிறோம். தோனி மற்றும் பிளெம்மிங் இருவரும் எந்த முடிவு எடுத்தாலும் அது அணியின் நலனுக்காகவே உள்ளது.


அதுபோல் நானும் மெக்கல்லமும் முடிவுகளை எடுக்க முயற்சித்து வருகிறோம். அதுதான் எங்கள் வெற்றிக்கான அடித்தளமாகவும் அமைகிறது என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியை பார்த்து இங்கிலாந்து அணியின் கேப்டன் + பயிற்சியாளர் கூட்டணி செயல்பட்டு வருகிறது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மெக்கல்லமும் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 31, 2024, 8:35 [IST]
Other articles published on Jan 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+