IND vs ENG: லார்ட்ஸ் மைதானத்தின் ராஜா.. இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்கள் குவித்த ஜோ ரூட்
லண்டன்: இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பிரம்மாண்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பொறுப்பாக விளையாடிய ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக 99 ரன்கள் சேர்த்து ஆட்ட நேரம் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு எதிராகவும், லார்ட்ஸ் மைதானத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஜோ ரூட்டின் சாதனைகள்
- லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள்: ஜோ ரூட் இதுவரை இந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 33 போட்டிகளில் விளையாடி 2526 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்த மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் கிரஹாம் கூச் 2513 ரன்கள் எடுத்திருந்தார்.
- இந்தியாவுக்கு எதிராக 3000 டெஸ்ட் ரன்கள்: இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜோ ரூட். இந்தப் போட்டியில் அவர் முதல் நாள் ஆட்டத்தில் 99 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இதுவரை இந்திய அணிக்கு எதிராக மூவாயிரம் ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- டெஸ்ட் போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர்கள்: ஜோ ரூட் அடித்த 99 ரன்களின் மூலம் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 103 முறை 50 ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்துள்ளார். இதில் 36 சதங்கள் மற்றும் 67 அரைசதங்கள் அடங்கும். இதன் மூலம் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக்குஸ் காலிஸ் ஆகியோருடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 119 முறை 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
- அதிக டெஸ்ட் சதங்கள் சாதனை: ஜோ ரூட் தற்போது 99 ரன்களுடன் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு ரன் எடுத்தால் சதத்தைக் கடப்பார். அதைச் செய்தால் 37 டெஸ்ட் போட்டி சதங்களை அடித்த வீரராக இருப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி ஐந்தாவது இடத்தைப் பிடிப்பார்.
IND vs ENG: "விளையாடவே முடியலை" கடுப்பான பும்ரா.. புகார் செய்த பென் ஸ்டோக்ஸ்.. தடைபட்ட ஆட்டம்
முதல் நாள் ஆட்ட நிலவரம்
முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Story first published: Friday, July 11, 2025, 10:01 [IST]
Other articles published on Jul 11, 2025


Click it and Unblock the Notifications