Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கல்லாம் மனுசங்களா? மருத்துவமனையில் கஷ்டப்படும் முகமது ஷமி.. இப்போதும் வன்மத்தை கக்கிய மனைவி

Mohammed shami wife : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தற்போது காயம் காரணமாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருக்கிறார். அவர் கடைசியாக உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.

அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர், அரை இறுதி போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் போன்ற பல சாதனைகளை முகமது ஷமி படைத்து ஹீரோவாக இருந்தார். இந்த நிலையில் ஷமிக்கு உலகக்கோப்பை தொடர் விளையாடும்போதே காயம் இருந்தது.

ind vs Eng - Mohammed shami wife post made fans angry

அதனையும் மீறி வலி நிவாரண ஊசி போட்டுக் கொண்டுதான் கிரிக்கெட் போட்டிகளில் ஷமி பங்கேற்றதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது காயம் தீவிரமாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து முகமது ஷமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவருக்கு ஆக்ஸிஜன் ட்யூப் மூக்கில் செலுத்தப்பட்டிருந்தது மற்றும் காலில் கட்டுடன் அவர் ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில் முகமது ஷமிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் காயத்திலிருந்து மீண்டு குணம் அடைய வேண்டும் என்ற பிரார்த்தனை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஷமியும் அவருடைய மனைவி ஹசின் ஜஹான் தற்பொழுது பிரிந்து இருக்கிறார்கள்.

தன்னுடைய கணவர் மருத்துவமனையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்ற ஒரு சின்ன இரக்கம் கூட இல்லாமல் சமூக வலைத்தளத்தில் நாயை ஒப்பிட்டு ஷமியை திட்டி இருக்கிறார். அதில் பிரபல ஆசிரியர் ஒருவர் வீரர்கள் மத்தியில் உள்ள திருமணம் தாண்டி உள்ள உறவுகள் குறித்து வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். அந்த வீடியோவில் சிலருக்கு எப்போது கோபப்பட வேண்டும்.

எப்போது சிரிக்க வேண்டும் என்றெல்லாம் நன்றாக தெரியும். அவர்கள் தங்களுடைய உணர்ச்சியை அவர்களுடைய சுலபத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஷமியின் மனைவி இதுபோன்ற நாய்கள் சத்தமாக கத்தும். தங்களை வித்தியாசமானவர்களாக காட்டிக்கொள்ளும்.

அவருடைய கோபம் எப்போதுமே இருக்கும். முகம் கூட சிவந்து விடும். ஆனால் நாங்கள் ஆப்பிள் சாப்பிடுவதால் தான் இப்படி இருக்கின்றோம் என்று கூறுவார்கள் என முகமது ஷமியை மறைமுகமாக மனைவி திட்டி போட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஷமி மருத்துவமனையில் இருக்கும் போது இது போன்ற பதிவை போடுவது தவறு என்றும் இதன் மூலம் தங்களின் இமேஜை தாங்களே கெடுத்துக் கொள்வதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, February 29, 2024, 16:41 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+