Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: பும்ரா விளையாடினால், இந்தியா வெற்றி பெறாதா? யார் சொன்னது? கடுப்பான சச்சின்

மும்பை: இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று தொடரை சமன் செய்தது. இந்த தொடரில் உடல் தகுதியை காரணம் காட்டி பும்ராவை வெறும் மூன்று போட்டிகளில் தான் இந்திய அணி விளையாட வைத்தது.

இந்த சூழலில் பும்ரா விளையாடிய மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு தோல்வி மற்றும் ஒரு டிராவை பெற்றது. பும்ரா இல்லாமல் களம் இறங்கி இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றது. ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள்.

Sachin Tendulkar on Bumrah

பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் அவர் இனி தேவை இல்லை என்பது போல் கமெண்ட்களை அடித்து வந்தனர். இந்த சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பும்ராவை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். இந்த தொடரில் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டி விளையாடினாலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பவுலர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

பும்ரா சிறப்பான தொடக்கத்தை அளித்தார்:

மேலும் 3 டெஸ்டில் விளையாடி பிறகும் ஐசிசி பவுலர்கள் தரவரிசை பட்டியலில் அவர் முதலிடத்தில் இருக்கின்றார். இது குறித்து பேசிய அவர், சச்சின் டெண்டுல்கர் பும்ரா இந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை இந்தியாவுக்கு அளித்தார். முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்டில் அவர் வரையாடவில்லை.ஆனால் மூன்றாவது நான்காவது டெஸ்ட் அவர் மீண்டும் களம் இறங்கி அதிலும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மூன்று டெஸ்டில் அவர் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ரசிகர்களின் பேச்சு மிகவும் தவறு:

ரசிகர்கள் பலரும் பும்ரா இல்லாமல் இந்தியா சிறப்பாக விளையாடியது என்று பேசி வருகிறவர்களை நான் கவனிக்கின்றேன். அது மிகவும் தவறு.பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றது எதர்ச்சியாக நடந்ததே தவிர அது காரணம் கிடையாது. பும்ராவின் தரம் என்பது அபாரமானது.

அவர் இந்தியாவுக்காக செயல்பட்ட விதத்தை யாராலும் நம்ப முடியாது அளவுக்கு சிறப்பாக இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பான செயல்பாட்டை எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி பும்ரா செயல்படுத்தி இருக்கின்றார். நான் எப்போதுமே புமராவை தான் முதலிடத்தில் வைப்பேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 7, 2025, 8:47 [IST]
Other articles published on Aug 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+