IND vs NZ: ஆகிப் நபி வேண்டாம்.. சிஎஸ்கே வீரரை பிளேயிங் லெவனில் சேருங்கள்.. EX வீரர் கருத்து
ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான தனது இந்திய அணி பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக எட்டாவது இடத்தில் ஆகிப் நபிக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜை அவர் தேர்வு செய்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது.
16 வீரர்கள் கொண்ட இந்திய அணியில், நிதிஷ் குமார் ரெட்டி முதலாவது போட்டிக்கு மட்டுமே விளையாடுவார். தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, 2023 உலகக்கோப்பையில் விளையாடிய டாப்-5 பேட்ஸ்மேன்களையே இதிலும் தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க வீரராகவும், விராட் கோலி 3-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4-வது இடத்திலும், கேஎல் ராகுல் 5-வது இடத்திலும் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய நிதிஷ் குமார் ரெட்டியை நிச்சயம் 6-வது இடத்தில் களம் இறக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
7-வது இடத்தில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேலை தேர்வு செய்த சோப்ரா, 8-வது இடத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு மாற்றாக அன்ஷுல் கம்போஜை சேர்க்க வலியுறுத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத சூழ்நிலையைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நாம், ஹர்ஷித் ராணா இல்லாத சூழலுக்குத் தயாராக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். கம்போஜால் பேட்டிங் செய்ய முடியும் என்பதால், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆகிப் நபியை விட அவர் சற்று சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் தான் விளையாடிய ஒரே ஒருநாள் போட்டியில் 9 ஓவர்களில் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து, 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். ஆகிப் நபி தனது ஒரே ஒருநாள் போட்டியில் 8.5 ஓவர்களில் 84 ரன்கள் விட்டுக் கொடுத்தார், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எட்டாவது இடத்தில் அன்ஷுல் கம்போஜ் பேட்டிங் செய்யக்கூடியவராக இருப்பதால், 9-வது இடத்தில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை சேர்க்க முடியும் என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். அவருடன் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications


