Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: முதல் டி20யில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? மாறும் பந்துவீச்சு படை

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் வியாழக்கிழமை கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி 12:30 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் டிரா செய்த நிலையில், தற்போது பலம் வாய்ந்த நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது.டி20 உலக கோப்பையில் பைனலில் அடைந்த தோல்விக்கு பழித் தீர்க்கும் விதமாக நியூசிலாந்த அணி இந்த தொடரை எதிர்கொண்டு உள்ளது.

Ind vs NZ

இந்த சூழலில் ஓய்வே இல்லாமல் இந்திய அணி விளையாடுவது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நியூசிலாந்து ஆடுகளங்களில் பயிற்சி செய்யக்கூட நேரம் இல்லாத சூழலில் தான் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்குகின்றனர்.

SA vs AUS: போலண்ட் அபார பந்துவீச்சு.. வந்த வேகத்தில் வெளியேறிய தென்னாப்பிரிக்க வீரர்கள்

SA vs AUS: போலண்ட் அபார பந்துவீச்சு.. வந்த வேகத்தில் வெளியேறிய தென்னாப்பிரிக்க வீரர்கள்

முதல் டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கே வாய்ப்பு வழங்கப்படும். மூன்றாவது வீரராக இஷாந்த் கிஷனும் நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் செய்கிறோம் விளையாட கூடும்.

ஐந்தாவது வீரராக இந்தியாவில் துணை கேப்டன் திலக் வர்மா பேட்டிங் செய்ய வருவார். ஆறாவது இடத்தில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஏழாவது வீரராக சிவம் துபே அல்லது நிதிஷ்குமார் என இரண்டு ஆல்ரவுண்டர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். எட்டாவது வீரராக அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மோதுவார்கள்.

இந்திய அணியில் இசான் கிஷனால் இந்த 24 வயது வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்- ஆகாஷ் சோப்ரா

Also Read

இந்திய அணியில் இசான் கிஷனால் இந்த 24 வயது வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்- ஆகாஷ் சோப்ரா

இதில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஒன்பதாம் வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும் பத்தாவது வீரராக புவனேஸ்வர் குமாரும் 11-வது வீரராக மாயங் யாதவும் விளையாடக் கூடும். கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் தேவை என இந்திய அணி நிர்வாகம் நினைத்தால் மாயங் யாதவ் இடத்தில் வருசக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரை பயன்படுத்தி கொள்ளலாம். நியூசிலாந்து மண்ணில் பெரும்பான்மையான வீரர்கள் முதல்முறையாக விளையாடுகிறார்கள் என்பதால், இந்த தொடர் அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக கிடைக்கும்.

Story first published: Tuesday, October 20, 2026, 8:00 [IST]
Other articles published on Oct 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+