Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 13.2 ஓவரில் எல்லாம் 199 ரன்கள் எட்டி இந்தியா அபாரம்.. அபிஷேக் சதத்தால் தொடரை வென்றது

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 199 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, 13.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி தொடரை வென்றுள்ளது.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு புதிய தொடக்க ஜோடியாக வைபவ் சூரியவன்சி மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, பவர் பிளேயில் 118 ரன்கள் குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தது. முதல் விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த நிலையில் சூரியவன்சி ஆட்டமிழந்தார்.

Ind vs NZ

19 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் சேர்த்த நிலையில், அவர் வெளியேறினார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த அபிஷேக் சர்மா, வெறும் 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

IND vs NZ: 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பு.. அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

IND vs NZ: 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பு.. அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

அவர் மொத்தமாக 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சாம்சன் 18 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, நமன் தீர் பவுண்டரி அடித்து இந்திய அணி 13.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

IND vs NZ: பவர்பிளேவில் இந்திய அணி புதிய உலக சாதனை.. ஆஸி ரெக்கார்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி,அபிஷேக்

Also Read

IND vs NZ: பவர்பிளேவில் இந்திய அணி புதிய உலக சாதனை.. ஆஸி ரெக்கார்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி,அபிஷேக்

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.முன்னதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டெரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி 198 ரன்கள் ஸ்கோரை உயர்த்தியது.

Story first published: Tuesday, October 27, 2026, 15:54 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+