Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: பவர்பிளேவில் இந்திய அணி புதிய உலக சாதனை.. ஆஸி ரெக்கார்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி,அபிஷேக்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது.

இந்த சூழலில் மூன்றாவது t20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் வெல்லிங்டன் நகரில் இந்தியா களமிறங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

Ind vs NZ

தொடக்க வீரராக யாரும் எதிர்பாராத வகையில் வைபவ் சூரியவன்ஷி அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இருவருமே நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தனர். நியூசிலாந்து வீரர்கள் வீசிய பந்தை எல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து நொறுக்க இந்திய அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

IND vs NZ: ஐயா! அப்படியே ஹர்திக் பாண்டியாவை பார்த்த மாதிரி இருக்கு.. பார்ட்னர்ஷிப்பை உடைத்து அபாரம்

IND vs NZ: ஐயா! அப்படியே ஹர்திக் பாண்டியாவை பார்த்த மாதிரி இருக்கு.. பார்ட்னர்ஷிப்பை உடைத்து அபாரம்

முதல் 14 பந்தில் எல்லாம் இந்திய அணி 50 ரன்கள் கடக்க அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்சி உடன் போட்டி போட்டுக்கொண்டு சிக்ஸர் பவுண்டரியை அடித்து நொறுக்கினார். இதில் அவர் 15 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஐந்து ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் கடந்த நிலையில் பவர் பிளேல் ஆஸ்திரேலியா அடித்த 113 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சூழலில் ஆறாவது ஓவரிலும் வைபவ் சூர்யவன்சி மற்றும் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கி 18 ரன்களை சேர்த்தனர். இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்களை சேர்த்து புதிய உலக சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 113 ரன்கள் குவித்தது.

IND vs NZ: 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பு.. அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

Also Read

IND vs NZ: 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பு.. அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா 102 ரன்களுடனும், இங்கிலாந்து மற்றும் இந்தியா 100 ரன்களுடனும் 3வது இடத்தில் பகிர்ந்து இருந்தனர்.தற்போது இந்தியா 118 ரன்களை குவித்ததன் மூலம் புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பவர் பிளேவில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்று இடத்தில் இருக்கின்றார்.

Story first published: Tuesday, October 27, 2026, 15:10 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+