IND vs NZ: ஐயா! அப்படியே ஹர்திக் பாண்டியாவை பார்த்த மாதிரி இருக்கு.. பார்ட்னர்ஷிப்பை உடைத்து அபாரம்
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் முக்கிய கட்டத்தில் விக்கெட் ஒன்றை வீழ்த்தி ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளார். 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்குகிறது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செபர்ட் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி தடுமாற்றத்தை சந்தித்தது. அப்போது களத்திற்கு வந்த டாரல் மிட்செல், பின் ஆலனுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். இருவரும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என மாற்றி மாற்றி அடித்து ரன் வேகத்தை அதிகமாக மாற்றினர்.
குறிப்பாக பவர் பிளேவில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் குவித்து அசத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 27 ரன்களில் 50 ரன்கள் கடந்தது. தொடர்ந்து இருவரும் அதிரடி காட்டியதால், இந்திய அணிக்கு மிகப்பெரிய இலக்கு நிர்ணிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்திய அணி ரசிகர்கள் இருந்தனர்.
இந்த ஜோடியை எந்த வீரர் உடைக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதுதான் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் தனது முதல் ஓவரிலேயே அபாரமாக பந்து வீசி பின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தினார். 5 சிக்சர்கள் விளாசி 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் பின் ஆலன் பவுண்டரி நமந்தீரின் அபார கேட்ச்சால் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் குமார் இந்த கூட்டணியை உடைத்தார். பொதுவாக இதுபோன்ற பார்ட்னர்ஷிப்பை ஆல் ரவுண்டர், ஹர்திக் பாண்டியா தான் டி20 கிரிக்கெட்டில் உடைப்பார். தற்பொழுது அவர் இல்லாத நிலையில் மாற்று ஆல் ரவுண்டரை தேடும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. இந்த கட்டத்தில் நிதிஷ்குமார் ரெட்டி தனது திறமையை நிரூபித்து அசத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications


