IND vs NZ: 2.2 ஓவரில் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பு.. அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதல் ஓவரிலேயே 26 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. குறிப்பாக 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி யாரும் எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.
சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய நிலையில் திடீரென்று இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.

இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக விளையாடிய வைபவ் சூர்யவன்சி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அணியின் ஸ்கோரை தொடங்கினார். இதனையடுத்து இரண்டாவது பந்து நோ பால் ஆக மாற பிரீ ஹிட்டில் மீண்டும் வைபவ் சூர்யவன்சி சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அதனை பவுண்டரி லைனில் நியூசிலாந்து வீரர்கள் தடுத்து விட்டனர்.இதனை பயன்படுத்தி இரண்டு ரன்கள் ஓடி வைபவ் எடுத்தார்.
அதன் பின்பு மூன்றாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரை அடித்த வைபவ் சூர்யவன்சி நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா ஆட்டத்தின் தனது முதல் பந்தை எதிர்கொண்டு தன் பங்கிற்கு அவரும் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் நிலைகுலைந்து போன நியூசிலாந்து வீரர் ஜாக்கப் டாபி முதல் ஓவரின் கடைசி பந்தை ஷார்ட் பாலாக வீச முயன்றார்.
ஆனால் அது ஓயிடாக சென்று விக்கெட் கீப்பிரையும் தாண்டி பௌண்டரிக்கு சென்றது. இதனால் இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் கிடைத்தது. இதை அடுத்து முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் ஷர்மா மீண்டும் ஒரு சிங்கிள் எடுத்தார். இதன் மூலம் முதல் ஓவரில் இந்திய அணி 26 ரன்கள் அடித்தது. வைபவ் சூரியவன்சி ஐந்து பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களும், அபிஷேக் சர்மா இரண்டு பந்துகளில் 7 ரன்களும் அடித்து இருந்தனர். மைதானத்தின் அளவு சிறியது என்பதால் இந்திய வீரர்கள் வாண வேடிக்கை காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications


